திருமணஞ்சேரி
tirumanaanchericom
படங்களுக்கு நன்றி
எல்லோருக்கும் வணக்கம்,
நான் இன்று திருமணஞ்சேரியில் உள்ள சிவஸ்தலத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்தக் கோவில் குற்றாலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. அங்குள்ள சிவனின் பெயர் கல்யான சுந்தரேஸ்வரர், பார்வதியின் பெயர் கோகிலாம்பாள். இந்த கோவிலின் விஸேஷம் என்னவென்றால், அங்கு சென்று சிவன் பார்வதி ஸந்நிதியின் முன்பு வேண்டி மாலைப் போட்டுக் கொண்டு வந்தால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைக் கூடும். அந்த மாலையை வீட்டில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிவனையும், அம்பாளையும் நினைத்து தினமும் வீட்டில் ஸ்லோகம் சொல்லி வர வேண்டும். அப்படிச் செய்தால் திருமணம் கண்டிப்பாகக் கைக்கூடும். ஆனால் திருமணமான பிறகு, கணவனையும் அழைத்துக் கொண்டு, தாம் கோவிலிருந்து கொண்டு வந்த பழைய மாலையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று, சிவன் பார்வதியின் சந்நிதியின் முன்பு மாலை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் கைமேல் பலன் கண்டிப்பாகக் கிடைக்கும். இது என் வாழ்க்கையில், நான் கண்கூடாகக் கண்ட உண்மை.
நன்றி
அன்புத்தோழி
2 comments:
எங்கள் குடும்பத்தில் எல்லாரும் இப்படி செய்வது வழக்கம்.
கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பித்த வுடன் முதல் வேலை அங்கே போவது
தான் . இறைவன் கையில் வாழ்க்கையை
குடுத்து நல்ல படி அமையும் என்ற
நம்பிக்கையோடு அடுத்த வேலையை
ஆரம்பிப்பார்கள்.
கமெண்ட் மாடரேஷன் செய்துவிடுங்கள்.
http://tamilblogging.blogspot.com/2006/12/blog-post.html
உதவிக்கு இங்கே பாருங்கள்.
Post a Comment