Thursday, April 26, 2007

கற்பூர நாயகியே கனகவல்லி

கற்பூர நாயகியே கனகவல்லி பாடலைப் பார்க்க ஒன்று, இரண்டு, மூன்று இடங்களில் சொடுக்கவும்.

Tuesday, April 24, 2007

சோம்னாத்பூர்






















 நான் இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள சோம்னாத்பூர் என்னும் இடத்தில் இருக்கும் கேசவ கோவிலைப் பற்றி உங்களிடம் எண் எண்ணங்களை பரிமாறிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கோவிலானது ஹொய்சால ராஜா நரசிம்மா3 (1254-1291 A.D.) வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலை கட்டியது சோம்னாத் என்னும் படைத் தளபதி. அவன் இக்கோவிலை காவிரி நதிக்கரையில் அமைத்திருக்கிறான். இவன் இந்த கோவிலை கட்ட பணவுதவியும், உத்தரவும் அந்நாட்டு மன்னனிடம் கேட்டு பெற்று, பின் இருப்பதிலேயே மிகவும் திறமை வாய்ந்த ஹொய்சாலா சிற்பிகளை கொண்டு இந்த கோவிலை கட்டி முடித்தான். இந்த கோவிலை செய்த சிற்பிகளின் பெயர் மல்லிதம்மா, மாசானத்தம்மா, சாமேயா, பாமேயா, மற்றும் பலர். மல்லிதம்மா என்னும் சிறப்புவாய்ந்த சிற்பி இருப்பதிலேயே அதிகமான சிற்பங்களை செதுக்கியுள்ளார். அந்தந்த சிற்பங்களுக்கு கீழே அதை உருவாக்கிய சிற்பிகள் தங்கள் பெயரை செதுக்கியுள்ளார்கள்.




இந்த கோவிலின் அமைப்பு, கோபுர வாசலை கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்து அதற்கு கீழ் 64 முக்குகள் வைத்து அதில் ஒவ்வொரு இடத்திலும் புராண கதை கொண்ட சிற்பங்களை வடித்துள்ளர்கள். இந்த கோவிலில் வேணுகோபாலர், கேசவர், ஜனார்த்தனர் ஆகியோரின் கர்ப்பகிரகங்கள் உள்ளன. தூண்களிலும், மேற்கூறையிலும் அழகாக வடிவங்களை சிற்பிகள் செதுக்கியுள்ளார்கள். அவை பார்க்க மிகவும் அழகாக உள்ளது. ஆக கோபுரதிற்கு உட்புரத்திலும், வெளிபுரத்திலும் சிற்பங்களாக நிறைந்து அந்த இடமே பார்க்க சொர்கலோமாக தோன்றும்.

இந்த கோவிலை நிறைய படத்தில் காட்சிகளாக பார்க்கலாம் (குறிப்பாக அருணாசலம் படத்தில் அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்ட என்ற பாட்டில் பார்க்கலாம்). இந்த கோவிலை நேரில் பார்த்து ரசித்தால் தான் மனதில் ஆழமாக பதியும். எல்லோரும் இந்த கோவிலில் உள்ள சிற்பங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த கோவிலைப் பற்றி கூற விரும்பினேன்.










Wednesday, April 18, 2007

அந்த அழகிய மாநகர் மதுரையிலே

என்னுடைய பங்களிப்பு இங்கே உள்ளது.

அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக

இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா

இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்

Monday, April 16, 2007

அழகுக்கு அழகு

கடலுக்கு அலை அழகு, அந்த
அலைகளின் ஓசை கேட்பதிற்கு அழகு

குழந்தையின் பிஞ்சு கால்கள் அழகு, அந்த
காலில் சிணுங்கும் தங்ககொலுசு கூடுதல் அழகு

பெண்ணிற்கு தாய்மை அழகு, அந்த
தாய்மைக்கு தன் பிள்ளையின் புத்திசாலிதனம் அழகு

ஆணுக்கு வீரம் அழகு, அந்த
வீரத்திற்கு விவேகமும் சேர்ந்தால் தான் அழகு

கிளிக்கு பச்சை நிறம் அழகு, அந்த
பச்சை நிறத்தில் சுட்டியிழுக்கும் பட்டுப் புடவைகள் அழகு

கடலுக்குள் முத்து அழகு, அந்த
முத்துகள் சேர்ந்து மாலையானால் கழுத்திற்கு அழகு

சூரியன் அதிகாலையில் விடிவது அழகு, அந்த
விடியலுக்காக காத்திருக்கும் விவசாயிகள் உழைப்பு அழகு

வி எஸ் கே அய்யாவிற்கு கவிதை அழகு, அந்த
கவிதைக்குள் பொதிந்திருக்கும் உண்மைகள் அழகு

என்னை அழகு சுற்றுக்கு அழைத்த திரு வி எஸ் கே அய்யாவிற்கு எனது நன்றி.

பதிலுக்கு நான் அழைக்கும் நபர்கள்

துளசி கோபால்
முத்துலெட்சுமி
கண்ணபிரான் ரவிசங்கர்
சத்யா
சிறில் அலெக்ஸ்

Friday, April 13, 2007

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்




நான் இன்று கருங்குளம் வெங்கடாசலபதி கோவில் பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் கூறுகிறேன். இத்திருக்கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் போகும் வழியில் இத்திருத்தலம் உள்ளது. இந்தக் கோவில் கருங்குளம் மலை மேல் உள்ளது. இந்தக் கோவிலில் ஒரு விசேஷம் என்னவென்றால் இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள், இரண்டு சந்தன கட்டைகளாக நமக்கு காட்சியளிக்கிறார். இதற்கு ஒரு புராணக் கதை உள்ளது. அதைப் பற்றி பின் கூறுகிறேன். இந்தக் கோவிலில் மற்ற முக்கியமான விசேஷம் என்னவென்றால், இங்கு உறங்கா புளி மரமும், ஊறா கிணரும் உள்ளது. அதாவது இந்த புளிமரத்தில் என்றுமே புளியம்பூ புளியங்காயாக மாறாது அதுமட்டுமில்லாமல் இந்த மரம் என்றுமே உறங்காமல் இருக்கும், அதேபோல இந்த கிணற்றில் என்றுமே தண்ணீர் வற்றாமல் இருக்கும் அதனால் புதிதாக தண்ணீர் என்றுமே ஊற்றெடுக்காது. இந்த கோவிலில் சித்திரா பௌர்னமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.
புராணக் கதை:
ஒரு காலத்தில் சுபகந்தன் என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் நெறி தவறாமல் அந்நாட்டு மக்களிடம் மிகவும் பிரியமாக பழகி வந்தான். அதனால் எல்லோரும் அவனிடம் அன்பாக பழகி வந்தார்கள். ஆனால் சில காலத்திற்கு பிறகு அவனுக்கு புற்று நோய் வர ஆரம்பித்தது. எந்த வைத்தியர்களாலும் அவனை குணப்படுத்த முடியவில்லை. புற்று நோய் அவன் உடம்பு முழுவதும் படற ஆரம்பித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் மிகவும் தவித்தான். பின் திக்கற்றவர்களுக்கு தெய்வமே கதி என்று திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று, அங்கு தங்கி இறைவனை நினைத்து முழுமனதுடன் பிரார்த்தித்தான். இதனால் பெருமாள் மகிழ்ந்து அவனது கனவில் தோன்றி, உன் நோய் குணமாக வேண்டுமென்றால் எனக்கு சந்தன கட்டைகளைக் கொண்டு வாகனம் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்ததில் இரண்டு கட்டைகள் மிஞ்சும், அதை கருங்குளம் மலையில் வந்து வைத்து விடு, அந்த கட்டைகளில் நான் என்றும் வசிப்பேன் என்றார். இப்படி செய்தால் உன் நோய் கண்டிப்பாக குணமாகும் என்றார். இதனால் அந்த அரசனும் மகிழ்ந்து பெருமாள் சொன்னது போலவே சந்தன கட்டைகளைக் கொண்டு வாகனம் செய்து பின் மிஞ்சியதை கொண்டு வந்து உறங்கா புளிமரம் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தான். இதனால் அவனுடைய நோய் நீங்கியது. ஆகவே இந்த பெருமாளை முழுமனதுடன் வணங்கினால், நோய்கள் தீர்ந்து நலமாக வாழலாம். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

Monday, April 9, 2007

நாய்கள் ஜாக்கிரதை

பங்களூரில் நாய்களின் கொண்டாட்டம் மிகவும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனக்கு தெரிந்தே "கோரமங்கலா" என்னும் இடத்தில் நாய்கள் தெருவில் வரும் வண்டிகளை துரத்தும். இப்பொழுது அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஒரு குழந்தையை பல நாய்கள் சேர்த்து கடித்து கொன்றுவிட்டது என்ற செய்தியை கேட்டதிலிருந்து மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பாவம் அந்த குழந்தை எவ்வளவு துடித்திருக்கும். அந்த குழந்தையின் தாய் தந்தைக்கு எவ்வளவு மனக்கஷ்டம். மற்றொரு குழந்தையையும் நாய்கள் கடித்திருக்கிறது. அந்த குழந்தையை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். அது மட்டுமிலாமல் பல பேருக்கு நாய்களினால் வண்டியிலிருந்து விழுந்து கைகால் ஒடிந்து போயிருக்கிறது. இந்த நாய்கள் கண்டதையும் தின்று, அதன் புத்தி பேதலித்து போயிற்று. இதற்கு அரசாங்கம் தான் சீக்கிரம் ஒரு நல்ல முடிவுவாக எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

இதை "The Hindu" செய்தித் தாளில் படித்தேன்.

Saturday, April 7, 2007

test


வியர்டு கவிதை

நான் இன்று வழக்கம் போல் என் மின்னஞ்சலை பார்க்க தொடங்கினேன். எஸ் கே அய்யா ஒரு மடல் அனுப்பியிருந்தார். பார்த்தால் இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே பங்கேற்றிருந்தாலும் நான் அழைத்ததிற்காக, மறுபடியும் வியர்டு விளையாட்டிற்கு ஒரு கவிதையே பதிவிட்டுள்ளார். கட்டாயம் பாருங்கள்.

Tuesday, April 3, 2007

ரவா லட்டு

தேவையான சாமான்கள்:

ரவை 1 ஆழாக்கு
சர்க்கரை 1 ஆழாக்கு (கொஞ்சம் தித்திப்பு தூக்கலாக வேண்டுமானால் ஒன்றரை ஆழாக்கு போட்டுக் கொள்ளலாம்)
முந்திரி பருப்பு 7-8 வரை சேர்க்கலாம்
கொஞ்சம் ஏலக்காய் தூள்
கொஞ்சம் நெய்

ரவையை முதலில் சிறிது நெய் சேர்த்து பொன்னிறமாக வருத்துக் கொள்ளவும். பின்பு வருத்த ரவையை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின் மேற்சொன்ன அளவு சர்க்கரையை தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதற்கு பிறகு இரண்டையும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். பின் முந்திரிபருப்பை வருக்காமல் பச்சையாகவே பொடிபொடியாக உடைத்துக் கொண்டு, அதையும் அந்த கலவையோடு சேர்த்துக் கொள்ளவும். பின் கொஞ்சம் ஏலக்காய் தூளையும் சேர்த்த பிறகு 3 முதல் 4 சிறு கரண்டி நெய் சேர்த்து லட்டு மாதிரி பிடிக்கவும்.