Monday, April 16, 2007

அழகுக்கு அழகு

கடலுக்கு அலை அழகு, அந்த
அலைகளின் ஓசை கேட்பதிற்கு அழகு

குழந்தையின் பிஞ்சு கால்கள் அழகு, அந்த
காலில் சிணுங்கும் தங்ககொலுசு கூடுதல் அழகு

பெண்ணிற்கு தாய்மை அழகு, அந்த
தாய்மைக்கு தன் பிள்ளையின் புத்திசாலிதனம் அழகு

ஆணுக்கு வீரம் அழகு, அந்த
வீரத்திற்கு விவேகமும் சேர்ந்தால் தான் அழகு

கிளிக்கு பச்சை நிறம் அழகு, அந்த
பச்சை நிறத்தில் சுட்டியிழுக்கும் பட்டுப் புடவைகள் அழகு

கடலுக்குள் முத்து அழகு, அந்த
முத்துகள் சேர்ந்து மாலையானால் கழுத்திற்கு அழகு

சூரியன் அதிகாலையில் விடிவது அழகு, அந்த
விடியலுக்காக காத்திருக்கும் விவசாயிகள் உழைப்பு அழகு

வி எஸ் கே அய்யாவிற்கு கவிதை அழகு, அந்த
கவிதைக்குள் பொதிந்திருக்கும் உண்மைகள் அழகு

என்னை அழகு சுற்றுக்கு அழைத்த திரு வி எஸ் கே அய்யாவிற்கு எனது நன்றி.

பதிலுக்கு நான் அழைக்கும் நபர்கள்

துளசி கோபால்
முத்துலெட்சுமி
கண்ணபிரான் ரவிசங்கர்
சத்யா
சிறில் அலெக்ஸ்

8 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னார்

ஆகா...இன்னொரு ரவுண்டா?

அன்புத் தோழி
பாருங்க, நீங்க கூப்பிட்ட அடுத்த நொடியிலேயே அழகுப்பதிவை ரெடி பண்ணிட்டேன்!
http://madhavipanthal.blogspot.com/2007/04/blog-post_15.html

எள்ளுன்னா ஏன் எண்ணெயா நின்னீங்கன்னு எல்லாம் கேட்கக் கூடாது! :-)

துளசி டீச்சரை, நீங்களும் கூப்பிட்டாச்சா.....டீச்சர் ஆல் தி பெஸ்ட்! :-)))

VSK சொன்னார்

ஆகா!
அழகு ஒன்றைச் சொல்லி , அதைப் போல உங்களுக்குப் பிடித்த, விரும்புகின்ற அடுத்த ஒன்றையும் கூடவே கேட்டு,

முத்து- முத்துமாலை, பச்சை- பச்சை பட்டுப் புடவை இப்படி!!]

ஒரு பெண்ணின் இயல்பை அழகாகக் காட்டியிருக்கிறீர்கள்!

"அலைமகளே வருக" எனச் சொல்லி அழைத்து, கூடவே,
"ஐஸ்வர்யம் தருக"
எனக் கேட்பது போல!
:))

வாழ்த்துகள்

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னார்

//அந்த
பச்சை நிறத்தில் சுட்டியிழுக்கும் பட்டுப் புடவைகள் அழகு//

என்னடா சொல்லலையேன்னு பாத்தேன் :-)

//குழந்தையின் பிஞ்சு கால்கள் அழகு//

சூப்பரா சொன்னீங்க தோழி! அதுவும் கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்தக் காலை வைத்துக் கோலம் வைப்பது அழகோ அழகு!!

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னார்

நன்றி அன்புத்தோழி நான் முன்பே எழுதிவிட்டேன் ..அழைத்ததற்கு நன்றி.
உங்கள் அழகுகள் பதிவு மிகவும் அழகாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

அன்புத்தோழி சொன்னார்

இன்னும் நிறைய ஆசைகள் இருக்கிறது. ஆனால் பொருளின் மீது பற்று வைக்க கூடாது என்று என்னை நானே சில சமயம் திட்டிக் கொள்வேன்.

நன்றி திரு வி எஸ் கே அய்யா

அன்புத்தோழி சொன்னார்

பரவாயில்லை முத்துலெட்சுமி யாரோ முந்திக் கொண்டு விட்டார்கள். இருக்கட்டும் வேரு சுற்று வந்தால் மறுபடியும் உங்களை அழைக்கிறேன்

அன்புத்தோழி சொன்னார்

குழந்தைகள் முகத்தைப் பார்த்தால் கவலைகள் அனைத்தும் பரந்துவிடும். நன்றி திரு KRS

MSATHIA சொன்னார்

ஆகா, இதல்லவோ அழகு.