உன்னாலே உன்னாலே
இந்த படத்தில் வினய் தான் நம்ம கதாநாயகன், சதாவும் தனிஷாவும் கதாநாயகிகள். இந்த படத்தில் எல்லாமே திரும்ப திரும்ப வந்துக் கொண்டே இருக்கும். அதாவது அதே நான்கைந்து முகங்களும், நான்கைந்து வரிகளும் திரும்ப திரும்ப வருகிறது. அதனால் தான் இந்த படத்தின் தலைப்பு கூட இரண்டு முறை வருகிறது. இந்த படத்தில் வித்யாசமாக யாருக்குமே அப்பா
அம்மாவை காட்டவேயில்லை. அதனால் காதலுக்கு எதிர்ப்பு கிடையாது. வினய்க்கு ஒரே ஒரு அக்கா. அக்கா வேடத்தில் நடித்திருப்பது உமா பத்மநாபன். இவங்களும் ஒரு சில காட்சியில் மட்டுமே வந்து போகிறார்கள். படத்தில் வரும் கதையை முக்கால்வாசிக்கு மேல் ஆஸ்திரேலியாவில் தான் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் நம்ம கதாநாயகன் பெயர் கார்த்திக்,
கதாநாயகிகளின் பெயர்கள் ஜான்சி (சதா), தீபிகா (தனிஷா). சரி கதையைப் பார்ப்போம். எடுத்த உடனே நம்ம ஜான்சியும், கார்த்திக்கும் சண்டை போட்டுவிட்டு பிரிந்து விடுகிறார்கள். பிறகு அந்த துக்கத்தில் கார்த்திக் ஓரு சோக பாடலை பாடி முடிக்கிறார். பிறகு அவர் முகத்தில் சோகத்தையும் காணும், காதலியை தேடவும் காணும். இது இப்படியிருக்க கார்த்திகிற்கு வேலை விஷயமாக ஒரு ஆறு மாதத்திற்கு ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அங்கு விமான நிலையத்தில் ஒரு பெண்ணிற்கு பொட்டிட்டு, ஆரத்தி எல்லாம் எடுக்கிறார்கள். அந்த பெண் விமானத்தில் வந்து உட்கார்ந்தவுடன் தன்னை நாகரீக மங்கையாக அலங்காரம் செய்துக்கொள்கிறாள். அவள் பெயர் தீபிகா. கார்த்திக்கும், தீபிகாவும் பக்கத்து பக்கத்தில் இடம் கிடைக்கிறது. தீபிகா, கார்த்திக்கிடம் பேசி பழகி இருவரும் நண்பர்களாகிறார்கள்.
இருவரும் ஆஸ்திரேலியா வந்து சேருகிறார்கள். தீபிகாவை அழைத்து செல்ல அங்கு ஜான்சி வருகிறாள். ஆகவே கார்த்திக்கை பார்த்ததும் உடனே தீபிகாவை சீக்கிரமாக அழைத்து செல்ல பார்த்தும், கார்த்திக் ஜான்சியை பார்த்து விடுகிறார். பின் கார்த்திக் ஜான்சிசை துரத்தி துரத்தி தேடி பேசிய விஷயங்களையே மறுபடியும் பேசி நிறைய நேரம் கதையில்
போய் விடுகிறது . கார்த்திக் அங்கு ஒரு தமிழ் ஆளை சந்தித்து அவனை நண்பனாக்கிக கொண்ட பிறகு ஜான்சிக்கும் தனக்கும் எப்படி சந்திப்பு உண்டாயிற்று என்று கூற ஆரம்பித்து அவளை காதலித்தது பற்றியும், பிறகு தான் மற்ற பெண்களிடம் சகஜமாக பழகுவதை தவறாக ஏற்றுக் கொண்டு சந்தேகப்பட்டு பிரிந்து போனது வறை கூறி முடிக்கிறார். அதன் பிறகு தீபிகாவும் கார்திக்கும் பழகுவது பற்றி பிடிக்காததால், ஜான்சி தனக்கும் கார்த்திகிற்கும் நடந்த சம்பவங்களை தீபிகாவிடம் கூறுகிறார். இதனால் நண்பனாக நினைத்த கார்த்திக்கை தீபிகா நிஜமாகவே காதலிக்க ஆரம்பிக்கிறார். பிறகு ஆறு நாட்களில் கார்த்திக் தன்னை காதலிக்கறாரா பார்க்கலாம் என்று ஜான்சியிடம் தீபிகா கூறுகிறாள். அதற்காக கார்த்திக்கிடம் நெருக்கமாக பழக ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் ஒரு நாள் கார்திக்கிற்கு கையில் அடி பட்டுவிடுகிறது. அதனால் அவனை மருத்துவமையில் சேர்ப்பதிலிருந்து அவனுக்கு பனிவிடைகள் செய்வது வறை தீபிகா
அவன் கூடவே இருக்கிறாள். ஆனால் இதற்கிடையில் ஜான்சிக்கு உள்ளூர கோபமிருந்தாலும் கார்த்திகை மறைமுகமாக காதலிக்கிறார். ஆனால் தீபிகாவின் அன்பைவிட நமது அன்பு குறைவே என்ற முடிவிற்கு வந்து, தான் கார்திக்கை நமது இஷ்டபடி தான் நடக்க வேண்டும், என்று தாம் நினைத்ததை எண்ணி அந்த ஊரைவிட்டே மறுபடியும் சென்று விடுகிறாள்.
இதற்கிடையில் தீபிகா தனது காதலை கார்த்திக்கிடம் வெளிபடுத்துகிறாள். தன்னை புரிந்துக் கொள்ளாத ஜான்சியை விட தீபிகாவே நல்லவள் என்ற முடிவுக்கு வந்து கார்த்திக் தீபிகாவை திருமணம் செய்துக் கொள்கிறான். இது தான் கதை. இந்த படத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?