பிரபுவின் பையனின் கல்யானம்
வணக்கம்
இப்பொழுதெல்லாம் நம் நாட்டு பத்திரிக்கைகளுக்கு முக்கியமான விஷயமென்றால் அது திரைப்படமும், நடிகர்களும் தான். இல்லையென்றால் குமுதம் வெப்சைட்டில், பரபுவின் பையனுடைய கல்யாண வீடியோவை, போட்டிருக்க மாட்டார்கள். ஏன் தான் நடிகர்கள் என்றால் தனி மறியாதையோ தெரியவில்லை. ஒவ்வொருத்தர், அவர்களின் துறையில் சிறந்து விளங்குகிறார்கள், அவர்களுக்கெல்லாம் நாம் ரசிகர் மன்றம் வைக்கிறோமா என்ன? ஏன் நாமெல்லாம் நமது பணியில் சிறந்து விளஙவில்லையா?, நமக்கெல்லாம் ஏன் ரசிகர் மன்றம் இல்லை?. முதலில் எதற்காக ரசிகர் மன்றம் வேண்டும், அவரவர்கள், அவர்களுடைய வேலையை செய்கிறார்கள், அவ்வளவு தான். இதே அஜித்துக்கும், விஜைக்கும், சூரியாவிற்கும், சிம்ரனுக்கும், ஜோதிக்காவிற்கும் ஏதாவது என்றால் உடனே அது பத்திரிக்கைக்கு வந்து விடும், ரசிகர்கள் படங்களை ஒட்டி கும்மாளம் அடிப்பார்கள், எப்பொழுது தான் இந்த நிலை மாறுமோ தெரியவில்லை.
அன்புத்தோழி
5 comments:
அதென்னவோ தமிழ் பத்திரிகைகளுக்கு சினிமாவையும் அரசியலையும் விட்டா வேற எதுவும் தெரியாது
தங்கள் மறுமொழிக்கு நன்றி
அன்புத்தோழி
அன்பு தோழிக்கு வணக்கம்
இப்பதிவில் ற மற்றும் ர இரு இடத்தில் மாறி உள்ளது அதை சரி செய்து கொள்ளவும்.
//முதலில் எதற்காக ரசிகர் மன்றம் வேண்டும், அவரவர்கள், அவர்களுடைய வேலையை செய்கிறார்கள், அவ்வளவு தான்.//
நானும் யோசித்திருக்கிறேன். பதில்...இந்த ரசிகர் மன்றங்களுக்கு கொஞ்சம் போல பணம் சப்ளை ஆகுமாம். உதா, 1 இலட்சம் பணம் கொடுக்கப்பட்டால், மன்றங்கள் அவற்றில் கொஞ்சம் செலவு செய்துவிட்டு அதில் இலாபம் பார்ப்பார்களாம். மொத்தத்தில் ரசிகர் மன்றங்கள் ரசிகர்களுக்கு பணம் காய்ச்சி மரங்கள்.
இதை எல்லாம் சொல்லும் பொருட்டு, 'ரசிகர் மன்றம்' என்ற பெயரில் ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த படம் வந்தால் தெரியும்.
//எப்பொழுது தான் இந்த நிலை மாறுமோ தெரியவில்லை.//
எல்லோரும் ஒழுங்கா பொழைக்கிற வழியை பார்த்துக் கொண்டால், இந்த நிலை மாறும்.
வணக்கம் சீனு,
நீங்கள் சொல்கிறது போலவும் உள்ளதா? ஆச்சரியமாய் உள்ளது. எனக்கு தெரிந்த தெல்லாம் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் பணத்தை வீண் செய்வது தான்
நன்றி
Post a Comment