Monday, March 12, 2007

தண்டீஸ்வரர் கோவில்

இந்தக் கோவிலானது வேளச்சேரியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்வயம்புவாகவே சிவலிங்கம் அமைந்துள்ளது. சிவனின் பெயர் தண்டபாணீஸ்வரர், அம்பாளின் பெயர் கருணாம்பிகை. இந்த கோவிலில் மற்றும் பிள்ளையார், முருகர், துர்க்கை, சரஸ்வதி, லஷ்மி, தட்சினாமூர்த்தி, நவகிரக சந்நிதிகள் உள்ளன. இது மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலின் விசேஷம் என்னவென்றால் மார்க்கண்டேயனுக்காக, சிவன் யமனிடம் சண்டையிட்டு பின் அவனுடைய தண்டத்தை கைப்பற்றினார். பின்பு, யமன் சிவனையெண்ணி தவம் செய்து, தன்னுடைய தண்டத்தை இந்த கோவிலில் தான் மீண்டும் பெற்றார். அதனால் தான் இந்த ஆலயத்தின் பெயர் தண்டீஸ்வரர் ஆலயம் என பெயர் பெற்றது. இந்த கோவிலில் யம தீர்த்தக் குளம் உள்ளது. இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

9 comments:

மு.கார்த்திகேயன் சொன்னார்

இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தவன் என்ற கணக்கில் தலைப்பை பார்த்தவுடன் ஓடோடி வந்தேன், அன்புத்தோழி :-)

மு.கார்த்திகேயன் சொன்னார்

அழகான உண்மையான புராண கதை, அன்புத்தோழி

வடுவூர் குமார் சொன்னார்

அப்படியே ஒரு புகைப்படத்தையும் போட்டால்,நாங்களும் இங்கிருந்தே தரிசித்து புண்ணியம் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?
இருந்தாலும் பரவாயில்லை,அடுத்த தடவை ஊருக்கு வரும் போது பார்த்துக்கொள்கிறேன்.

லக்கிலுக் சொன்னார்

இந்தக் கோயிலுக்கு சென்றிருக்கிறேன். குளம் சமீபத்தில் தான் சீர்திருத்தப்பட்டிருக்கிறது. சோழர் காலத்துக் கோயில் என்கிறார்கள். சோழர் காலத்தில் வேளச்சேரியின் பூர்வஜென்ம பெயர் தண்டீஸ்வரமாம்.

மடிப்பாக்கத்திலும் ஒரு சோழர்காலத்து சிவனாலயம் உண்டு!

Arun's Thoughts சொன்னார்

வணக்கம் கார்த்திகேயன்,

நீங்கள் அந்த கோவிலுக்கு சென்று வந்தது பற்றி மிகவும் சந்தோஷம். மறுமொழிக்கு நன்றி

Arun's Thoughts சொன்னார்

வணக்கம் வடுவூர் குமார்,

மன்னிக்க வேண்டும் புகைப்படம் என்னிடம் இல்லை. எடுத்தவுடன் சேர்த்து இணைக்கிறேன்

நன்றி

Arun's Thoughts சொன்னார்

வணக்கம் லக்கிலுக் அவர்களே,

ஆமாம் பல நாள் கழித்து, இப்பொழுது தான் அந்த குளம் பார்க்கும் படி ஆகியிருக்கிறது. மடிப்பாக்கத்தில் உள்ள சிவாலயத்தின் விவரம் பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். முடிந்தால் சொல்லவும்

நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னார்

இந்தக் கோயிலுக்கு நானும் சிலமுறை வந்திருக்கிறேன். அமைதியான கோயில்..பழமையானதாக இருப்பதாலேயே எனக்கும் பிடித்திருந்தது.

Arun's Thoughts சொன்னார்

தங்கள் மறுமொழிக்கு நன்றி முத்துலெட்சுமி