Thursday, March 8, 2007

மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்

எல்லோருக்கும் என் மங்கையர் தின வாழ்த்துக்களை மனதாரத் தெரிவித்துக் கொள்கிறேன். மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று பாரதியார் கூரியிருக்கிறார். ஆம் ஒரு பெண்ணின் சௌந்தர்யத்தை நாம் மகாலஷ்மிக்கு ஒப்பிடுகிறோம், அவள் தைரியத்தை நாம் பராசக்திக்கு ஒப்பிடுகிறொம், அதே போல் படிப்பில் சிறந்து விளங்கினால், சரஸ்வதி குடிகொண்டிருக்கிறாள் என்று நாம் உவமானம் சொல்வோம். அதேபோல் இயற்கை அன்னை என்றும், பாரத மாதா என்றும் சொல்கிறோம். ஆகவே எந்த ஒரு எடுத்துக்காட்டையும் நாம் பெண்ணினத்தோடு தான் ஒப்பிடுகிறோம். அதுபோல் ஒரு பெண்ணுக்கு கல்வி அளித்தால், அது ஒரு குடும்பத்துக்கே அளித்த சமானம் என்பார்கள். எந்த வீட்டில் பெண் சந்தோஷமாக இருக்கிறாளோ, அந்த வீட்டில் மகாலஷ்மி குடி கொண்டிருப்பாள்.

ஒரு பெண்ணானவள் தன் கணவனுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும், அவனுடைய கஷ்ட காலத்தில் ஒரு நல்ல தோழியாகவும், மனம் கலங்கும் நேரத்தில் நல்ல தாய்மையுணர்வோடும், சந்தோஷமான நேரத்தில் சக தர்மினியாகவும் இருக்க வேண்டும். அதனால் தான் பரமசிவனும், ஈஸ்வரிக்கு தன்னுடைய பாதி உடலை தந்திருக்கிறார். சிவனில்லையேல் சக்தியில்லை, சக்தியில்லையேல் சிவனுமில்லை. அதேபோல் மாகாவிஷ்னுவும், லஷ்மிக்கு தன் இதய கமலத்தில் இடம் தந்திருக்கிறார். ஆகவே, நானும் ஒரு பெண் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

4 comments:

சிறில் அலெக்ஸ் சொன்னார்

வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னார்

\\எந்த வீட்டில் பெண் சந்தோஷமாக இருக்கிறாளோ, அந்த வீட்டில் மகாலஷ்மி குடி கொண்டிருப்பாள்//

அதான் கொஞ்சமே கொஞ்சம் பணக்காரர்கள் இருக்காங்களோ இந்தியால...:-))

வாழ்த்துக்கள் அன்புத்தோழி

Arun's Thoughts சொன்னார்

வணக்கம் சிறில் அலெக்ஸ்,

தங்கள் வாழ்த்துக்கு நன்றி

Arun's Thoughts சொன்னார்

நீங்கள் சொல்வதும் உண்மை தான் முத்துலெட்சுமி. ஆனால் இந்த நிலை ஒரு நாள் கண்டிப்பாக மாறும்

நன்றி