Wednesday, May 2, 2007

செண்பகவல்லி அம்மன்
நான் இன்று செண்பகவல்லி அம்மன் கோவிலைப் பற்றி எழுதப்போகிறேன். இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் கோவில்மேடு என்னும் இடத்தில் காந்தி மைதானத்திற்கு பின்புரத்தில் உள்ளது. இந்த கோவிலை செண்பகராஜா என்னும் அரசர் கட்டியுள்ளார். இது மிகவும் பழமைவாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் இருக்கும் சிவனின் பெயர் பூவனநாதசுவாமி. இங்கிருக்கும் அம்மனின் சிலை வடிவம் சுமார் ஏழு அடி உயரம் இருக்கும். அம்மனை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். அம்மனுக்கும் சிவனுக்கும் தனித்தனி பிரகாரங்கள் உள்ளது. இங்கிருக்கம் அம்மனுக்கு சக்தி அதிகம். அம்மனின் அருளால் அங்கு எல்லோருமே சுபிக்ஷமாக இருக்கிறார்கள். இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு, நவராத்திரி, வருஷப்பிறப்பு போன்ற விசேஷங்கள் விமர்சையாக கொண்டாடப்படும். அதுமட்டுமில்லாது, மார்கழி மாதம் முழுவதுமே அம்பாளுக்கு விசேஷமாக கொண்டாடப்படும். உங்களுக்கு இக்கோவில் பற்றி தெரிந்த மற்ற விஷயங்களையும் நாம் பரிமாரிக்கொள்ளலாம்.

9 comments:

இசக்கிமுத்து சொன்னார்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் எனககு தெரியாத விஷயங்கள்!! நன்றி! தொடரட்டும்!!

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திரு இசக்கிமுத்து

Raveendran Chinnasamy சொன்னார்

I am from this places . There are some websites talks about this .

King Shenbaga Raja Built this temple . temple is the small mountain ( kunru ) and there used to be agathiyar theertam which gives water all around year ( Kovilpatti is popular for water scarcity - see KB's Thaneer Thaneer ).

Chitrai therootam is major festival which brings all nearby villages come to town and visit temple . Temple has 2 rath and it runs on the last day of punguni and welcome chitirai .
During the festival , this town is fullof colours and you can feel karisa kattu people's innocent nature.

Festival is organised into 10 days earlier and every day expenses are taken care of one caste ( kattalai ) and lately one caste wants to participiate so they have added anotehr day in chitirai 2 as Theppa kula thrivizha . Unfortunatley low caste is only allowed to pull the rath whereas they are not allowed to participitate in temple functions as sponcer when i lived there ( upto 1990 )


Worshipping deities in this temple follows "OM " yes start with Pillaiyar and ends with Murugan just oppsite to him .

Temple is also popular during Skanta shasti duration as it conducts processions with suran and final day suran will be killed by Lord muruga and all these acts are folk .


Sorry being english in reply and grammer .
Hope some one can understand my comment .

Another question for you can i link this blog to my site ?

Raveendran Chinnasamy சொன்னார்

Another link you can include in this story :

Kovilpatti Temple Miracle :


http://www.atharvavedapeetam.org/The_Swamiji.htm

G.Ragavan சொன்னார்

செண்பகவல்லி அம்மன் திருக்கோயில்...என்னுள் பல நினைவுகளைத் தட்டி விடுகிறது. நாங்களும் கோயில்பட்டியில் சிறிதுகாலம் இருந்தோம். அப்பொழுது செண்பகவல்லியம்மன் கோயில் எங்களுக்கு நல்லதொரு தொழுகையிடம்.

கோயிலின் பழமை உள்ளே சென்றதும் தெளிவாகத் தெரியும். ஆண்டுக்கொருமுறை வளையல் சாத்துதலும் நடக்கும். நாம் வளையல்களைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொள்ள வேண்டும். சாற்று நாளுக்குப் பிறகு அந்த வளையலை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு போகலாம். பெண்பிள்ளைகளுக்கு ரொம்பவும் நல்லது என்பார்கள்.

கோயிலுக்குள்ளே முருகப் பெருமானுக்கும் தனிச்சந்நதி உண்டு. அங்கும் பலகாலம் உருகி நின்றிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னுடைய மனம் இரைஞ்சும். அப்பனே முருகா...கதிரேசன் கோயில் என்று சொல்கிறார்களே...அது பாழ்பட்டு சீழ்பட்டு மலைக்குமேலை மலக்குவியல்களுக்கு நடுவிலே வீணாய்ப்போனதே....யாராவது எடுத்துச் செய்ய வைக்க மாட்டாயா..இல்லையேல்..எனக்காவது செல்வத்தை நிறையக் கொடு. நானெடுத்துச் செய்கிறேன் என்று வேண்டுவேன். எங்க சொந்தக்காரங்க அந்தக் கதிரேசன் மலைக்கோயில் தெருவில் இருக்காங்க. நான் அந்த மலைக்கோயிலுக்கு உடைஞ்சு காணமப்போன படிகள்ள ஏறிப்போயி...நாலு முட்டுச் சுவத்த மட்டும் பாத்துட்டுப் பாத்துட்டு வர்ரது அவங்களுக்குத் தெரியும். அப்புறம் நாங்கள்ளாம் அங்க இங்கன்னு போயி பெங்களூருக்கு வேலைக்கு வந்தாச்சு. அப்பத்தான் இடிஞ்ச சுவர்களைத் தள்ளி விட்டுவிட்டு கோயில் எழுப்பி..படிகளைச் செதுக்கி..கிரிவலப் பாதை செய்து...என்று காதில் பஞ்சாமிர்தம் ஊற்றினார்கள். அதற்குப் பிறகு அங்கு சென்றதும் பார்த்ததும் மகிழ்ந்ததும்....
http://gragavan.blogspot.com/2006/05/7.html இங்க இருக்கு.

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னார்

செண்பகவல்லி என்று கோவில்பட்டியில் கூப்பிட்டால், குறைந்த பட்சம் பத்து பேராவது திரும்பிப் பார்ப்பார்கள்.

அம்மனின் சாந்நித்யம் அப்படி.
க்ளோஸ்-அப் படம் கொள்ளை அழகு, அன்புத் தோழீ!

அன்புத்தோழி சொன்னார்

இந்த கோவில் பற்றி நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் மிகவும் அருமையாக உள்ளது. நன்றி திரு ரவி (raveendran chinnasamy). நீங்கள் தாராளமாக இந்த தொடுப்பை உங்கள் பதிவில் கொடுக்கலாம்

அன்புத்தோழி சொன்னார்

செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆரம்பித்து கதிரேசன் கோவில் வரை சொல்லி ஊரையை சுற்றி காண்பித்ததிற்கு நன்றி திரு ஜிராகவன்

அன்புத்தோழி சொன்னார்

எனக்கு தெரிந்தே எங்கள் சொந்த காரர்களில் அதிக பெயர் வைத்திருப்பது இந்தப் பெயர் தான். நன்றி திரு KRS