Wednesday, February 28, 2007

திருக்கடையூர்


நான் இன்று திருக்கடையூர் ஸ்தலத்தைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். இந்தக் கோவில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. சிவனின் பெயர் அமிர்த கடேஸ்வரர், அம்பாளின் பெயர் அபிராமி. இந்தக் கோவிலானது, மூன்று விதமான சிறப்புகளைப் பெறப் பெற்றுள்ளன.

1. அந்தக் கோவிலில் உள்ள பிள்ளையார்.
2. எமனிடமிருந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றிய சிவலிங்கம்.
3. அபிராமி பட்டரைக் காப்பாற்றிய அம்பாள்.

முதலில் வினாயகரைப் பற்றி சொல்லுகிறேன். முன்னொரு காலத்தில், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பார்க்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தார்கள். ஆனால் அதற்காக, அவர்கள் முழு முதற் கடவுளான வினாயகரை ப்ராத்திக்க மறந்து விட்டார்கள். அதனால், வினாயகர் அந்த அமிர்தத்தை எடுத்து கொண்டு வந்து திருக்கடையூரில் ஒளித்து வைத்து விட்டார், பிறகு உண்மை அறிந்து, வினாயகரிடம் மன்னிப்பு கேட்டு, தேவர்கள் அந்த அமிர்தத்தை அருந்தினார்கள்.


2. எமனிடமிருந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றிய சிவலிங்கம்:

முன்னொரு காலத்தில், ம்ரிகண்ட முனிவர் என்பவர், தனக்கு புத்திர பாக்கியம் பெற சிவனை எண்ணி தவம் இருந்தார். அவருக்கு காட்சி அளித்த பரமேஸ்வரன், அரிவிற்சிறந்தவனாகப் பிறந்து பதினாரு வயது வறை வாழும் புத்திரன் வேண்டுமா, இல்லையானால் முட்டாளாகப் பிறந்து நீண்ட காலம் வாழும் புத்திரன் வேண்டுமா என்று முனிவரிடம் கேட்டார். அதற்கு முனிவர், தனக்கு சில காலமே வாழும் புத்திரன் இருந்தாலும் போதும், ஆனால் அவன் அறிவோடு இருக்க வேண்டும் என்று வரம் பெற்றார். பிறகு அந்த முனிவருக்கு குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டன் என்று பெயர் சூட்டினார். அவனிடம் நடந்தவற்றைக் கூறி சிவனை எண்ணி தவம் செய்யும் படியும் கூறினார். ஆகையால் மார்க்கண்டேயனும், சிவனை எண்ணி பெரும் தவம் புரிந்தார். அவனுக்கு பதினாறாவது காலம் எட்டியது, அந்த நேரத்தில் எமதர்மன், அவனுடைய உயிரைக் கொண்டுப் போவதற்காக அவனை நெருங்கினார். ஆனால் சிவன் அங்கு தோன்றி, மார்க்கண்டேயன் தன்னை சரண் அடைந்தால், அவனுடைய உயிரைக் கொண்டுச் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் எமன், சிவனை மதிக்காமல் தன்னுடைய பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீசினார். அப்பொழுது அவன், சிவனை கட்டிக் கொண்டு இருந்ததால், அந்தப் பாசக்கயிறு சிவனையும் சேர்த்து சுத்தியது. இதனால் கோபம் அடைந்த சிவன், எமனை தன் காலால் மிதித்து, அவனுடைய சக்தியை கைப்பற்றினார். இதனால், தான் செய்த தவறை எண்ணி, எமன் சிவனிடம் மன்னிப்புக் கேட்டு விடைப் பெற்றுக் கொண்டார். பிறகு மார்க்கண்டனுக்கும் என்றும் பதினாறு வயதாக வாழ்வாயாக என்று சிவன் வரம் அளித்தார்.

இதனால் தான் யாருக்காவது, எதாவது நோய் இருந்தால், இங்கு வந்து பரிகாரம் செய்வதாக வேண்டிக் கொள்வார்கள், அல்லது அறுபதாம் திருமணம் செய்துக் கொள்வார்கள். குழந்தைக்கு நோய் வந்தால், இங்கு வந்து காது குத்துவார்கள், அல்லது பூனல் கல்யானம் செய்வார்கள். குறிப்பாக நோய் நீங்குவதற்கு, இந்த ஸ்தலம் புகழ் பெற்றதாகும்.


3. அபிராமி பட்டரைக் காப்பாற்றிய அம்பாள்.

அபிராமி பட்டர் என்பவர், அம்பளின் பூரண பக்தர். தன் வாயால் மனிதர்களைப் புகழ்ப் பாட்டு பாட மாட்டார். இதை அறிந்த அந்த நாட்டு மன்னன், இவரை தன் அரண்மனைக்கு வரச் செய்தார். அபிராமி பட்டரைப் பார்த்து இன்று அமாவாசையா, அல்லது பௌர்னமியா என்று அந்த மன்னன் கேட்டார். என்நேரமும் அம்பாளையே எண்ணிக் கொண்டிருந்ததால், பௌர்னமி என்று வாய் தவறி கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னன், அபிராமி பட்டரை சிறையில் இட்டார். இதனால் மன வேதனை அடைந்த பட்டர், அம்பாளை எண்ணி நூறு பாடல்களை அந்தாதியாகப் பாடினார், ஆகையால் அபிராமியும் மனம் குளிர்ந்து, தன் காதிலிருந்த காதணியை எடுத்து எரிந்தார், அது முழு பௌனமி நிலவாக மாறியது. இதனால் தன் தவறை உணர்ந்து, அபிராமி பட்டரிடம் மன்னன் மன்னிப்புக் கேட்டான்.

குறிப்பு: அந்தாதி என்பது, ஒரு பாடலின் கடைசி வார்த்தையிலிருந்து, அடுத்த பாடலின் முதல் வரியாக அமைவது.

நன்றி

அன்புத்தோழி

Tuesday, February 27, 2007

எண்ணெய் கத்தரிக்காய்

தேவையான சாமான்கள்:

பிஞ்சு கத்தரிக்காய் 1/4 கிலொகிராம்
(கத்தரிக்காய் குட்டி குட்டியாக இருக்க வேண்டும்)
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு
எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்
பொடித்துத்தூவ: 4 மிளகாய் வற்றல்
கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
துவரம் பருப்பு ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிறு துண்டு
சிறிது உப்பு

செய்முறை:

கத்தரிக்காயை காம்பு கொஞ்சம் இருக்குமாறு வெட்ட வேண்டும். கத்தரிக்காயையும் நான்காக வகுர வேண்டும் தனித்துண்டமாக்கக் கூடாது. நறுக்கிய காயை தண்ணீரில் போட்டு வைக்கவும். அடுப்பை மூட்டி வாணலியை அடுப்பில் வைத்து நான்கு டேபில் ஸ்பூன் எண்ணெய்யை விட வேண்டும். அது காய்ந்து வரும் போது நறுக்கிய காயைப் போட வேண்டும். பின் மஞ்சள் தூளை சிறிது போட வேண்டும். நன்றாக கிளரி விட்டு ஸிம்மில் வைத்து மூட வேண்டும். திரும்ப திரும்ப கிளர வேண்டும். எண்னெய் காணாமல் மண்டு விடக்கூடாது. ஐந்து நிமிடம் கழித்து அதில் புளியை நன்றாக கட்டியாக கரைத்து தெளிந்தார்ப்போல் விட வேண்டும். உப்பையும் சேர்த்து நன்றாக கிளரி விட சேர்ந்து வெந்து விடும். பிறகு மேலே தூவுவதற்கு மிளகாய் வற்றல் மற்றும் பருப்பு வகைகளை தனியாக வாணலியில் எண்ணெய் கொஞ்சம் விட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். பருப்புகள் கருகி விடக்கூடாது. வறுத்த பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றை மிக்ஸியில் பொடி செய்து, பின் வதங்கி வரும் கத்தரிக்காயில் போட்டு நன்றாக சேர்த்து கிளரி இரண்டு நிமிடம் அடுப்பில் இருக்கச்செய்து இறக்க வேண்டும். காய், எண்ணெய், பொடித்துப்போட்ட தூள் எல்லாம் சேர்ந்து வதங்கி இருக்க வேண்டும். கொழகொழவென்று இருக்கக்கூடாது.

Monday, February 26, 2007

திருமணஞ்சேரி


tirumanaanchericom

படங்களுக்கு நன்றி

எல்லோருக்கும் வணக்கம்,

நான் இன்று திருமணஞ்சேரியில் உள்ள சிவஸ்தலத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்தக் கோவில் குற்றாலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. அங்குள்ள சிவனின் பெயர் கல்யான சுந்தரேஸ்வரர், பார்வதியின் பெயர் கோகிலாம்பாள். இந்த கோவிலின் விஸேஷம் என்னவென்றால், அங்கு சென்று சிவன் பார்வதி ஸந்நிதியின் முன்பு வேண்டி மாலைப் போட்டுக் கொண்டு வந்தால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைக் கூடும். அந்த மாலையை வீட்டில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிவனையும், அம்பாளையும் நினைத்து தினமும் வீட்டில் ஸ்லோகம் சொல்லி வர வேண்டும். அப்படிச் செய்தால் திருமணம் கண்டிப்பாகக் கைக்கூடும். ஆனால் திருமணமான பிறகு, கணவனையும் அழைத்துக் கொண்டு, தாம் கோவிலிருந்து கொண்டு வந்த பழைய மாலையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று, சிவன் பார்வதியின் சந்நிதியின் முன்பு மாலை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் கைமேல் பலன் கண்டிப்பாகக் கிடைக்கும். இது என் வாழ்க்கையில், நான் கண்கூடாகக் கண்ட உண்மை.

நன்றி

அன்புத்தோழி

கத்தரிக்காய் கறி

தேவையான சாமான்கள்:

கத்தரிக்காய் கால் கிலொ
புளி : ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் இரண்டு டேபில்ஸ்பூன்

செய்முறை:

அடுப்பை மூட்டி அதில் வாய் அகன்ற பாத்திரத்தை வைக்க வேண்டும். அதில் புளி கரைத்த ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட வேண்டும். அதில் உப்பை போட்டு நறுக்கிய கத்தரிக்கயைப் போட வேண்டும். காய் நறுக்கும் போது நீளவாக்கில் நறுக்க வேண்டும். காய் மூன்று நிமிடத்தில் வெந்து விடும். கத்தரிக்காய் வேகும் போது அடுப்பு நன்றாக எரிய வேண்டும். அதுபோல் காயை நறுக்கி தண்ணீர் விடாமல் வைத்திருந்தால் காய் கருத்து விடும். அதேபோல் மிகுந்த நேரமும் ஊற வைக்கக்கூடாது. காய் வெந்தப்பின் தண்ணீரை வடித்து விட வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கரிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்த காயைப்போட்டு நன்றாக கிளரி, காய் துவண்டப்பின் தேங்காய் துருவலைச் சேர்த்து இரண்டு நிமிடம் ஸிம்மில் போட்டு நன்றாக கிளரி இறக்கவும். காரம் வேண்டுமானால் சிறிது தனி மிளகாய் பொடி அல்லது சாம்பார் பொடி சேர்த்துக் கொள்ளலாம். கத்தரிக்காய் கறி தயாராகிவிட்டது.

Friday, February 23, 2007

குழந்தை உரைமருந்து

வணக்கம்,

நான் இன்று குழந்தைக்குத் தரும் உரைமருந்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். உரைமருந்து என்பது இயற்கை மருந்தை ஒரு கல்லில் அல்லது சந்தனக்கட்டை உறைக்கும் கல்லில் உறைத்துக் கொடுக்க வேண்டும். அதாவது சுக்கு, மிளகு, வசம்பு (பிள்ளை வளப்பான்), ஜாதிக்காய், மாசிக்காய் இவற்றை உரைத்து தாய்ப்பாலுடன் சேர்த்து குழந்தைளுக்கு பிறந்த பத்து நாளைக்குப் பின் கொடுக்க வேண்டும். முதலில் ஐந்து முறை உரைத்துக் கொடுக்க வேண்டும், ஆனால் ஜாதிக்காயையும், மாசிக்காயையும் எப்பொழுதுமே குறைத்துக் கொடுக்க வேண்டும். இதை ஆறு மாதம் வறை ஒரு நாள் விட்டு, ஒரு நாள் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் குழந்தைக்கு ஜீரண சக்தி அதிகரிக்கும், இதனால் அதிகமாக கக்காமல் இருப்பார்கள். அதிலும் வசம்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஆறு மாதத்திற்க்கு பிறகு அளவை கொஞ்சம் அதிகரித்து அதாவது பத்து முறை வறை உரைத்துக் கொடுக்கலாம், ஆனால் வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால் போதும். அதே போல் உஷ்ணமான ப்ரதேசத்தில் வாழ்பவர்கள் கொஞ்சம் சந்தன கட்டையும் லேசாக உரைத்துக் கொடுத்தால் குழந்தையின் உடம்பு சிறிது குளிர்ச்சியாக இருக்கும், ஆனால் குழந்தைக்கு ஐந்து மாதமாவது ஆகியிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்று வலித்தால் வசம்பை அடுப்பில் காய்த்து நன்றாகப் பொடித்து திப்பி இல்லாமல் தாய் பாலுடன் சேர்த்துக் கொடுக்கலாம். இல்லையானால் வெற்றிலையில் வெளக்கெண்ணையை தடவி அடுப்பில் வெதுவெதுப்பாக அதாவது குழந்தை உடம்பு தாங்கும் வறை வைத்துப் பின் குழந்தையின் வயிற்றில் வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் மலம் வெளியில் வெளியேறி, குழந்தைக்கு வயிற்று வலி குணமாகும். இதைப்போல் மலம் வெளி்யேறாமல் குழந்தை வயிறு கல் போல் இருந்தாலும் செய்யலாம்.

நன்றி

அன்புத்தோழி

பீன்ஸ் பொரியல்

தேவையான சாமான்கள்:

கால் கிலொ பீன்ஸ்
மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன்
உப்பு ஒன்றறை டீஸ்பூன்
தேங்காய் துருவல் இரண்டு டேபில்ஸ்பூன்
தாளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் ஒரு டேபில்ஸ்பூன்

செய்முறை:

பீன்ஸை நன்றாக கழுவிய பின் தண்ணீரை வடித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு ட்ம்ளர் தண்ணீர்விட்டு பிறகு கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு கொதிக்க விட வேண்டும். அதில் நறுக்கியப் பீன்ஸை போட்டு பிறகு மேலே சொன்ன அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளரி மூடி விட வேண்டும். நன்றாக கொதித்து வரும் சமயம், அடுப்பை ஸிம்மில் வைத்து மூடி போட வேண்டும். பீன்ஸ் ரொம்பவும் குழைந்து விட கூடாது. பிறகு தண்ணீரை வடிகட்டிவிட வேண்டும். அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பை போட்டு தாளிக்க வேண்டும். பிறகு வடிகட்டிய காயைப்போட்டு நன்றாக கிளரி ஈரம் போய் காய் துவண்டு வரும் போது துருவிய தேங்காயையும் சிறிது கரிவேப்பிலையும் போட்டு கிளரி இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கவும். பீன்ஸ் பொரியல் தயாராகிவிட்டது.


அன்புத்தோழி

சுந்தர காண்டம்

எல்லோருக்கும் வணக்கம்,

நான் இன்று ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தின் பெருமையைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். ஏனென்றால் மற்ற ஆறு காண்டத்தை விட, இந்த காண்டம் மிகவும் முக்கியமானதும், சக்கியும் வாய்ந்தது. அனுமார், ராமருக்காக சீதா தேவியைக் காண இலங்கைக்குச் செல்கிறார். அங்கு சீதா தேவியின் கஷ்டங்களைப் பார்த்து, ஆறுதல் கூறி ராமர் கொடுத்து அனுப்பிய மோதிரத்தைக் கொடுக்கிறார். தாம் சீதா தேவியைப் பார்த்ததற்கு சாட்சியாக அவர்கள் தலையில் சூடியிருந்த சூடாமணியைப் பெறுகிறார். பிறகு விபீஷணின் நட்பு அவருக்குக் கிடைக்கிறது. பின் ராவணனை நேருக்கு நேராக சந்தித்து, ராமரின் தூதனாக எச்சரிக்கை செய்கிறார். இதனால் கோபம் அடைந்த ராவணன், அனுமரின் வாலில் தீயை வைக்கிறார். பின் அனுமார், இலங்கை முழுவதும் (சீதா தேவியின் இடத்தைத் தவிற) தீயை வைத்து தன் கைவரிசையைக் காண்பிக்கிறார். அதற்குப் பின் சீதா தேவியிடம் விடைப் பெற்றுக் கொண்டு, ராமரைச் சந்தித்து நிகழ்ந்தவற்றைக் கூறி அவரைத் தேற்றுகிறார். இதனால் ராமர் மகிழ்ச்சி அடைந்து, அனுமரைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். பிறகு விபீஷனன் அதற்மத்தை எதிர்த்து நிற்க, ராமரிடம் வந்து சேருகிறார். இது தான் சுந்தர காண்டத்தில் வரும் பகுதி.

இதை முழு நம்பிக்கையுடன் வீட்டில் தினமும் பகுதிகளாகப் படித்து, கற்கண்டு கலந்த காய்ச்சியப் பாலை நைய்வேத்தியம் செய்து, தான் மட்டுமே அருந்த வேண்டும். இப்படி செய்தால் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும். இதை முழுவதும் படித்து முடித்தப் பின் சர்க்கரைப் பொங்கல் நைய்வேத்தியம் செய்து, மற்றவர்களுக்கும் வினியோகம் செய்யலாம். உங்கள் எண்ணம் நிறைவேற நானும் ப்ராத்தித்துக் கொள்கிறேன்.

நன்றி

அன்புத்தோழி

baby food posion

babyfoodpoisoncheckthisout

hello everybody,

Today i got the shocking news that in the organic baby foods, they are including Clostridium botulinum, which can cause botulism. Botulism is a potentially fatal form of food poisoning and causes illness within 18-36 hours of exposure, with early symptoms of a decreased frequency or absence of stools, poor feeding, lethargy, weak cry and difficulty with swallowing with drooling from the mouth.

Now a days, we are not able to believe even the organic foods, that too for babies. So every parent should be very careful, while buying any artificial foods. whenever ur buying those items check the contents in the bottle, or u can consult with other parents, who are already having practice to those baby foods.

thanks

anbuthozhi

Thursday, February 22, 2007

மாங்காடு "ஸ்ரீ காமாட்சி" ஸ்தல வறலாறு
ஒரு நாள் பரமேஸ்வரனும், பரமேஸ்வரியும் கைலையில் மகிழ்ச்சியாக குலாவிக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது விளையாட்டாக பரமேஸ்வரி, பரமேஸ்வரனின் இரு கண்களையும் மூடினாள். இதனால் அண்ட சராசரமும் இருண்டு போயிற்று. ஆகையால் சிவன் மிகவும் கோவம் கொண்டு, பூமிக்கு செல்லும் படி சாபம் அளித்தார். பதிதனின் சொல்படி ஈஸ்வரியும் பூமியில் இருக்கும் மாங்காட்டில் வந்து தவம் செய்ய தொடங்கினாள். நாட்களும் நகர்ந்தன ஆனால் சிவனிடமிருந்து மன்னிப்பு கிடைக்கவில்லை. ஆகையால் ஈஸ்வரி, ஆம்ரா ரண்யத்தில் ( மாங்காட்டின் சிறப்புப் பெயர்) ஐங்குண்டம் வளர்த்து, அதன் நடுவில் இடக்காலின் பெருவிரல் அக்னியில் படும்படியும், வலக்காலை உயரத்திலும், ஒரு கையை தலை மேலும் மறு கையை நாபி மேலும், கண்களை மூடியும் கடுந்தவம் செய்யத் தொடங்கினாள். இதனால் மனம் மாறி சிவன், அம்பாளைக் காண வரும் சமயத்தில் பூமியில் வேறொறு முனிவர் சிவபெருமான் பூஜை செய்துக் கொண்டு இருந்தார். ஆகையால் பூஜையின் பிரியன் அவ்விடம் சென்று விட்டார். ஆனால் பூஜை தொடர்ந்துக் கொண்டே போக, ஈஸ்வரன் அசரீரி வாக்கினால் காஞ்சிக்கு வந்து மணப்பதாய் ஈஸ்வரியிடம் கூறினார். இதனால் மனம் மகிழ்ந்து அம்பாள் காஞ்சிக்கு சென்றாள். தவம் செய்த கோலத்தால் மாங்காட்டில் அம்பாளின் பெயர் தவக்காமாட்சி என்றானது. மணலில் சிவனின் உருவத்தைச் செய்து திருமணம் செய்ய அம்பாள் வேண்டினாள். நல்ல பங்குனி உத்திர நாளில் திருமணம் நடந்தது.

ஆனால் திருமணத்திற்காக செல்லும் போது, அக்னியை அணைக்க அம்பாள் மறந்து விட்டாள். இதனால் நிலங்கள் வறண்டது, பயிர்கள் சுருண்டது, பகுதியும் இருண்டது. ஆகையால் மக்கள் அனைவரும் குருமணியிடம் (ஆதி சங்கரர்) தம் குறைகளை சொல்லினார்கள். அதற்கு ஆதி சங்கரர் தம் ஞான திருஷ்டியில் உணர்ந்து, அஷ்ட கந்தமெனும் எட்டு மூலிகைகள் சேர்த்து "அர்த்தமேரு" ப்ரதிஷ்டை செய்தார். அதன் பெயர் "ஸ்ரீசக்கரம்". இதனால் அக்னி அழிந்து மாங்காடு சுபிக்ஷமானது. ஆனால் அம்பாளின் உக்கர கோலம் மட்டும் மாறாமல் இருந்ததால், மக்கள் செல்ல பயந்து கோயில் மட்டும் சான்னித்தியம் ஆகாமல் இருந்தது. பின்பு ஒரு நாள் ஆதி சங்கரர் அடிச் சுவட்டில் வந்த காஞ்சிப் பெரியவர் அங்கு வந்தார். தன்னுடைய ஞான திருஷ்டியில் நிலைமையை உணர்ந்திட்டப் பின் மூலத்தில் இருந்த தவக்கோல காமாட்சியை எடுத்து, சாந்த தேவியை ப்ரதிஷ்டைச் செய்தார். ஒரு கையில் கிளியோடும், மறுக்கையை கீழோடும் "ஆதி காமாட்சி" என்னும் பெயர் வைத்தார்.

அங்கு அம்பாளை ஆறு வாரம் வந்து தொழுதால் குறைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் ஆகும், குழந்தை இல்லாதவற்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாதவற்களுக்கு தக்க வேலை கிடைக்கும். நாம் எந்த நாளில் செல்கிறோமோ அதே நாளில் தொடர்ந்து ஆறு வாரம் செல்ல வேண்டும். நாம் ஒவ்வொரு முறை செல்லும் போதும் இரண்டு எலுமிச்சை பழம் கோவிலில் கொடுக்க வேண்டும். அதற்கு அவற்கள் பூஜை செய்த ஒரு எலுமிச்சைப் பழம் கொடுப்பார்கள். நாம் அந்தப் பழத்தை அம்பாளாக பாவித்து தினமும் பூஜை செய்ய வேண்டும். பிறகு அடுத்த வாரம் செல்லும் போது பூஜை செய்த பழத்தோடு மூன்று பழமாக கோவிலில் கொடுக்க வேண்டும். இதேபோல் ஆறு வாரம் செய்து பின் கடைசி வாரம் ( ஆறு வாரங்கள் முடிந்தப் பின்) நன்றாக காய்ச்சியப் பாலில் ஏலக்காய் போட்டு கோவிலில் நெய்வேத்தியத்துக்காக் கொடுக்க வேண்டும். பிறகு தாமும் அறுந்தி, கோவிலில் உள்ள மற்றவற்களுக்கும் வினியோகம் செய்ய வேண்டும். பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பாக கைமேல் பலன் கிடைக்கும்.

நன்றி

அன்புத்தோழி

தீபாவளி

நான் இப்பொழுது கடைசியாக பார்த்த படம் "தீபாவளி", எதற்காக இந்த தலைப்பு வைத்தார்கள் என்று இந்த நிமிடம் வறை எனக்கு தெரியவில்லை. படம் பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். வழக்கம் போல் "மறதி" யை பற்றி தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதில் கொஞ்சம் வித்யாசம் என்னவென்றால் கடந்த மூன்று வருட காலத்தில் நடந்தது மட்டுமே மறந்து போயிற்று. பின் நம் கதா நாயகி ஒருவனை காதலிக்கிறாள். பின் வழக்கம் போல் அவளின் தந்தையிடமிருந்து எதிர்ப்பு. அதனால் நம் கதா நாயகன் வருங்கால மாமனாரிடம் உதை வாங்குகிறார். அந்த அதிர்ச்சியில் மறுபடியும் பழைய சம்பவங்கள் கதா நாயகிக்கு மறந்து விடுகின்றன. பின்பு நம் கதா நாயகியை தொடர்ந்து சென்று அவளை மறுபடியும் காதலிக்க வைக்கிறார் நமது கதா நாயகன். இது தான் கதை. உங்கள் கருத்தை வரவேற்க்கிறேன்.

நன்றி

அன்புத்தோழி

பீன்ஸ் உசிலி

தேவையான சாமான்கள்:

பீன்ஸ் கால் கிலொகிராம்
உப்பு ஒன்ற்ரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு சிட்டிக்கை
நூறு அல்லது ஐம்பது கிராம் துவரம் பருப்பு
இரண்டு மிள்காய் வற்றல்
தாளிக்க சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய்

செய்முறை:

பீன்ஸை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக அரிந்து கொள்ள வேண்டும். பின்பு அடுப்பை மூட்டி அதில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள் பொடி போட்டு ந்ன்றாக கொதித்தப்பின் அதில் ந்றுக்கிய காயைப்போட்டு நன்றாக கொதித்து வேகவிட வேண்டும். பாதி வேகும் போது அடுப்பை சிம்மில் வைத்து காயை மூடிப்போடவும். ஐந்து நிமிடத்தில் காய் வெந்து விடும். (காய், உசிலி போன்றவற்றுக்கு குழைய விட கூடாது). காய் வெந்த பின் வடிதட்டில் கொட்டி வெந்த த்ண்ணீரை வடித்து விடவும்.

பருப்பை உசிலிக்கும் முறை: துவரம்பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊரிய பின் களைந்து தண்ணீரை வடித்து விட்டு அத்துடன் மூன்று மிளகாய் வற்றல், சிறிதளவு உப்பு, பெருங்கயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அறைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பை மூட்டி அதில் வைத்து அறைத்த விழுதை போட்டு பக்குவமாக ஸிம்மில் வைத்து கிண்ட வேண்டும். ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம் வறை ஆகும். கிளரி, கிளரி விட பருப்பு விழுது உதிர்ந்து "உப்புமா" போல் ஆகி விடும். ஒன்றொடு ஒன்று சேராமல் உதிர வேண்டும். அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் வெந்த பீன்ஸை எடுத்து வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பை தாளித்து கரிவேப்பிலை சேர்த்து கிளரி விட வேண்டும். காய் நன்றாக துவண்டு வரும் போது உசிலித்த பருப்பை சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் உசிலி, காய் இரண்டையு
ம் சேர்த்து வதக்கிய பின் இறக்கவும். பீன்ஸ் உசிலி தயார்.

Wednesday, February 21, 2007

யாரை நம்புவது

kumudham.com

குமுதத்திற்கு நன்றி

இந்த காலத்தில் யாரை நம்புவதென்றே தெரியவில்லை, ஆனால் ஒன்று யாரையும் முழுசாக நம்பக்கூடாது, அது மட்டும் உண்மை. நம்பினால் இப்படி தான் ஆகும். இங்கே பாருங்கள் கோயில் குருக்கள் என்ற பெயரில் மற்றவற்களுக்கு அருள் வாக்கு சொல்லுவதாக கூறி, அவற்களுடைய பணத்தை பறிக்கிறார்கள். ஏதாவது ஏடாகூடம் ஆனால் பிறகு கொலையே செய்து விடுகிறார்கள். மந்திரிப்பது, மாந்த்ரீகம் செய்வது, எல்லாம் ஒரு குருக்கள் செய்யக் கூடிய காரியமா? இவர்களால் மற்ற ஒழுக்கமான குருக்களுக்கும் கெட்ட பெயர் வருகிறது. இவற்களை எல்லாம் அந்த கடவுளே வந்து தண்டித்தால் தான் உண்டு. அது வறையில் நாடு இப்படி தான் இறுக்கப் போகிறது.

எனக்கு எம்ஜியார் படத்தில் பாடிய பாட்டு தான் ஞாபகம் வருகிறது, "திருடாதே பாப்பா திருடாதே, திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" . ஆகையால் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பலாப்பழ பாயாசம்

தேவையான சாமான்கள்:

பலாப்பழச்சுளை இருபது எண்ணிக்கை
தேங்காய் நன்றாக முற்றியது ஒரு மூடி
(துருவிய பூ ஒரு கப் வேண்டும்)
நெய் ஐம்பது கிராம்
வெல்லம் ஒரு கப் பொடித்தது
கொஞ்சம் முந்திரி பருப்பு
ஏலக்காய்பொடி ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பலாபழச்சுளைகளை கொட்டை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக ந்றுக்கி வைத்துக்கொள்ளவும். வாய் அகன்ற பெரிய பாத்திரத்தில் நறுக்கிய சுளைகளை போட்டு நன்றாக குழையும் வரை வேக விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக விட வேண்டும். அதன் பிறகு வெல்லத்தைப் போட்டு நன்றாக பாகு வாசனை வரும் வரை கரண்டியால் கிண்டி விடவும். அதன் பிறகு தேங்காய் அரைத்த விழுதை போட்டு ஒரு கொதி கொதித்தவுடன் இறக்கவும். முந்திரி பருப்பை நெய் விட்டு வறுத்துப் போடவும். பின் ஏலக்காய் பொடி போடவும். (பலாப்பழச்சுளை வேகும் போது கொஞ்சம் நெய் விட வேண்டும்). பாயாசம் தயாராகி விட்டது.

How breastfeeding benefits you and your baby

hi,

You're probably well aware that breast milk is best for your baby, but did you know that the benefits of breastfeeding extend well beyond basic nutrition? In addition to containing all the vitamins and nutrients your baby needs in the first six months of life, breast milk is packed with disease-fighting substances that protect your baby from illness.

check this website, its defenitely helpful for the new mothers.
baby center.com

see, there will be many advantages for the babies who had breast feed atleast upto one year as they will be more intelligent having high IQ, less allergitic to food, prevent obesity, less infections etc. And also it will be very helpful for the mothers too like preventing breast cancer, mentally relaxed when feeding to baby and also there will be more affection between them when compared to others who did n't breastfeed their babies. Because most of the mothers are going to work and so they are not able to breast feed the babies, but they can do it in either one of the 2 ways as pumping ur milk by using automatic electric breast pump or if u work nearby u can come in the breaks for nursing ur baby. If u can't do these things atleast u can feed the baby in the nights and in the mornings, but u should release ur milk in the day time, otherwise the milk will diminish.

Its the duty of every mother to take care of their child among other alternatives.whatever we are feeding now to babies will be a strong foundation for the baby.

take care

anbuthozhi

Tuesday, February 20, 2007

பால் பாயாசம்

தேவையான சாமான்கள்:

அரிசி - நூறு க்ராம்
பால் - ஒரு லிட்ட்ர்
சீனி - அரை கிலொக்ராம்
முந்திரி பருப்பு
கொன்சம் நெய்
கிராம்பு, ஏலம், ஜாதிக்காய் பொடித்த தூள் ஒரு சிமிட்டா

செய்முறை:

அரிசியை நன்றாக களைந்து குக்கர் அல்லது அடிகனமான பாத்திரத்தில் பாலில் முக்கால் பன்கு விட்டு நன்றாக வேக வைக்கவும். குக்கரில் வைத்தால் "வெய்ட்" போட்ட பின் பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். குக்கர் திறந்த பின் நன்றாக கரண்டியால் பாலும் அரிசியுமாக வெந்த கலவையை மசிக்க வேண்டும். பின் சீனியும் போட்டு பாலும் விட்டு நன்றாக ஐந்து அல்லது பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின் இற்க்கி வைத்து முந்திரி பருப்பை நெய் விட்டு வருத்து போடவும். ஜாதிக்காய், ஏலம், கிராம்பு தூள் செய்து வைத்திருப்பதில் போடவும். பாயாசம் த்யாராகி விட்டது.