Friday, February 23, 2007

சுந்தர காண்டம்

எல்லோருக்கும் வணக்கம்,

நான் இன்று ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தின் பெருமையைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். ஏனென்றால் மற்ற ஆறு காண்டத்தை விட, இந்த காண்டம் மிகவும் முக்கியமானதும், சக்கியும் வாய்ந்தது. அனுமார், ராமருக்காக சீதா தேவியைக் காண இலங்கைக்குச் செல்கிறார். அங்கு சீதா தேவியின் கஷ்டங்களைப் பார்த்து, ஆறுதல் கூறி ராமர் கொடுத்து அனுப்பிய மோதிரத்தைக் கொடுக்கிறார். தாம் சீதா தேவியைப் பார்த்ததற்கு சாட்சியாக அவர்கள் தலையில் சூடியிருந்த சூடாமணியைப் பெறுகிறார். பிறகு விபீஷணின் நட்பு அவருக்குக் கிடைக்கிறது. பின் ராவணனை நேருக்கு நேராக சந்தித்து, ராமரின் தூதனாக எச்சரிக்கை செய்கிறார். இதனால் கோபம் அடைந்த ராவணன், அனுமரின் வாலில் தீயை வைக்கிறார். பின் அனுமார், இலங்கை முழுவதும் (சீதா தேவியின் இடத்தைத் தவிற) தீயை வைத்து தன் கைவரிசையைக் காண்பிக்கிறார். அதற்குப் பின் சீதா தேவியிடம் விடைப் பெற்றுக் கொண்டு, ராமரைச் சந்தித்து நிகழ்ந்தவற்றைக் கூறி அவரைத் தேற்றுகிறார். இதனால் ராமர் மகிழ்ச்சி அடைந்து, அனுமரைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். பிறகு விபீஷனன் அதற்மத்தை எதிர்த்து நிற்க, ராமரிடம் வந்து சேருகிறார். இது தான் சுந்தர காண்டத்தில் வரும் பகுதி.

இதை முழு நம்பிக்கையுடன் வீட்டில் தினமும் பகுதிகளாகப் படித்து, கற்கண்டு கலந்த காய்ச்சியப் பாலை நைய்வேத்தியம் செய்து, தான் மட்டுமே அருந்த வேண்டும். இப்படி செய்தால் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும். இதை முழுவதும் படித்து முடித்தப் பின் சர்க்கரைப் பொங்கல் நைய்வேத்தியம் செய்து, மற்றவர்களுக்கும் வினியோகம் செய்யலாம். உங்கள் எண்ணம் நிறைவேற நானும் ப்ராத்தித்துக் கொள்கிறேன்.

நன்றி

அன்புத்தோழி

1 comments:

துளசி கோபால் சொன்னார்

//கற்கண்டு கலந்த காய்ச்சியப் பாலை நைய்வேத்தியம் செய்து, தான் மட்டுமே அருந்த வேண்டும்//

நோ ச்சான்ஸ். அதெப்படி தன்னலமா தான் மட்டுமே அருந்துவது?

சுந்தரகாண்டம் படிச்ச புண்ணியமெல்லாம் போயே போச்(-:

நாங்க இப்ப வெள்ளிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படிக்கிறோம் அஞ்சு குடும்பங்கள் சேர்ந்து.