Wednesday, February 21, 2007

யாரை நம்புவது

kumudham.com

குமுதத்திற்கு நன்றி

இந்த காலத்தில் யாரை நம்புவதென்றே தெரியவில்லை, ஆனால் ஒன்று யாரையும் முழுசாக நம்பக்கூடாது, அது மட்டும் உண்மை. நம்பினால் இப்படி தான் ஆகும். இங்கே பாருங்கள் கோயில் குருக்கள் என்ற பெயரில் மற்றவற்களுக்கு அருள் வாக்கு சொல்லுவதாக கூறி, அவற்களுடைய பணத்தை பறிக்கிறார்கள். ஏதாவது ஏடாகூடம் ஆனால் பிறகு கொலையே செய்து விடுகிறார்கள். மந்திரிப்பது, மாந்த்ரீகம் செய்வது, எல்லாம் ஒரு குருக்கள் செய்யக் கூடிய காரியமா? இவர்களால் மற்ற ஒழுக்கமான குருக்களுக்கும் கெட்ட பெயர் வருகிறது. இவற்களை எல்லாம் அந்த கடவுளே வந்து தண்டித்தால் தான் உண்டு. அது வறையில் நாடு இப்படி தான் இறுக்கப் போகிறது.

எனக்கு எம்ஜியார் படத்தில் பாடிய பாட்டு தான் ஞாபகம் வருகிறது, "திருடாதே பாப்பா திருடாதே, திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" . ஆகையால் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

1 comments:

ரமேஷ் வைத்யா சொன்னார்

உங்களுக்குக் கோபம் ஏற்படுத்திய விஷயமென்றாலும் மயிலிறகால் அடித்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் நல்லவராக இறுக்கிறீர்கள்.