Wednesday, February 21, 2007

பலாப்பழ பாயாசம்

தேவையான சாமான்கள்:

பலாப்பழச்சுளை இருபது எண்ணிக்கை
தேங்காய் நன்றாக முற்றியது ஒரு மூடி
(துருவிய பூ ஒரு கப் வேண்டும்)
நெய் ஐம்பது கிராம்
வெல்லம் ஒரு கப் பொடித்தது
கொஞ்சம் முந்திரி பருப்பு
ஏலக்காய்பொடி ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பலாபழச்சுளைகளை கொட்டை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக ந்றுக்கி வைத்துக்கொள்ளவும். வாய் அகன்ற பெரிய பாத்திரத்தில் நறுக்கிய சுளைகளை போட்டு நன்றாக குழையும் வரை வேக விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக விட வேண்டும். அதன் பிறகு வெல்லத்தைப் போட்டு நன்றாக பாகு வாசனை வரும் வரை கரண்டியால் கிண்டி விடவும். அதன் பிறகு தேங்காய் அரைத்த விழுதை போட்டு ஒரு கொதி கொதித்தவுடன் இறக்கவும். முந்திரி பருப்பை நெய் விட்டு வறுத்துப் போடவும். பின் ஏலக்காய் பொடி போடவும். (பலாப்பழச்சுளை வேகும் போது கொஞ்சம் நெய் விட வேண்டும்). பாயாசம் தயாராகி விட்டது.

0 comments: