Wednesday, October 17, 2007

மீனாட்சி அம்மன் திருக்கோவில்- பாகம் 1

இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் ஆலயம் மீனாட்சி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயம் மதுரை மாநகரத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் சுந்ததேஸ்வரர். இன்னும் இவருக்கு மற்ற பெயர்களும் உள்ளது. அவற்றில் ஒரு சில பெயர்களை குறிப்பிடுகிறேன். சோமசுந்தரர், கல்யாண சுந்தரர், சொக்கநாதர், கடம்பவனேஸ்வரர். இன்னும் பல உள்ளன. அதுபோல் அம்மனின் பெயர் மீனாட்சி. மற்ற பெயர்கள் அங்கயர்க்கண்ணி, மரகதவல்லி, கோமகள், அபிராமவல்லி, சுந்தரவல்லி இன்னும் பல. ஒரு சில இடங்களில் சிவனுக்கு சக்தி அதிகம், அது போல் ஒரு சில இடங்களில் அம்மனுக்கு சக்தி அதிகம். அப்படி பார்த்தால் மதுரை, மீனாட்சி அம்மனின் ஆட்சியில் தான் நடக்கிறது. நாம் கூட கிண்டலுக்கு கேட்போம் என்ன உங்கள் வீட்டில் மீனாட்சியா, சிதம்பரமா. இந்த கேள்விக்கு அர்த்தம், வீட்டில் பெண்ணின் ஆட்சியா இல்லை ஆணின் ஆட்சியா. இது கிண்டலுக்காக கேட்பது. மீனாட்சி= மீன்+ஆட்சி. மதுரை மீனாட்சி தன் மீன் போன்ற கண்களினால், அந்த இடத்தையே ஆட்சி புரிகிறாள். இதற்கு புராணத்தில் கதை உள்ளது.




ஸ்தல வரலாறு; பாண்டிய வம்சத்தில் வந்த மலயத்துவஜர் என்னும் அரசனுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இதனால் தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென ஒரு வேள்வி நடத்தினார். இந்த வேள்வியின் முடிவில் ஒரு பெண் குழந்தை அந்த ஓமகுண்டத்திலிருந்து தோன்றியது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அம்மன்னன் அந்த குழந்தைக்கு அங்கயற்கண்ணி என்றும் மீனாட்சி என்றும் பெயர் சூட்டினார். ஆனால் அந்த குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருந்தது. இதனால் அம்மன்னன் மிகவும் வருத்தமடைந்தான். அப்பொழுது அசரீரியாக ஒரு குரல் வந்து, '' எப்பொழுது உன் மகள், தன் மனதிற்கு பிடித்த மணாளனை காண்கிறாளோ அப்பொழுதே அந்த மூன்றாவது மார்பகம் மறைந்துவிடும்'' என்றது. இதனால் மனம் திருப்தி அடைந்த அம்மன்னன், தன் பெண்ணை மிகவும் தைரியசாலியாக வளர்த்தார். வெகு விரைவிலேயே மன்னனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மீனாட்சியை அரசியாக முடிசூட்டினார்கள். மீனாட்சியும், தன் வலிமையால் மற்ற அரசர்களை வெற்றி கொண்டாள். இப்படி ஒரு நாள், கைலாயத்தில் போர் நிகழும் போது, மீனாட்சி தன் மணாளனான சிவபெருமானை காண்கிறாள். அந்த நேரத்தில் அவளுடைய மூன்றாவது மார்பகம் மறையவே, இவர் தான் தான் மணக்கப்போகும் மனாளன் என்பதை உணர்ந்து சிவபெருமானிடம் போரிடாமல், நாணத்தால் தன் தலை குணிந்தாள். இதன் பிறகு மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தேறியது. பின்னர் சிவபெருமான் ஆட்சி புரிந்து பின்னர் உக்கிர பாண்டியன் என்னும் மகனை மதுரைக்கு முடிசூட்டிவிட்டு, சிவனும் அம்பாளும் கைலைக்கு செல்கிறார்கள். ஆனாலும் இன்று வரை அந்த மீனாட்சி அம்மனே மதுரையை ஆட்சி புரிந்து, மக்களை வாழ்த்துகிறார்.

இன்னும் சிவபெருமானுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஒரு நாள் இந்திரன் பூலோகத்திற்கு வந்தான். அப்பொழுது கடம்பவனத்தில் சிவலிங்கம் ஒன்றை கண்டார். அந்த சிவலிங்கத்தை வணங்கி பின் அதை கொண்டுவந்து மதுரையில் பிரதிஷடை செய்தான். பின் அந்த கோயிலை எடுத்து பெரிதாக கட்டியது குலசேகர பாண்டியன் என்னும் மன்னன். நாம் இந்திரன் பிரதிஷ்டை செய்ததிற்கு ஆதாரமாக அங்கு இந்திர வாகனத்தை பார்க்கலாம். நடுவில் பல வேற்று மத அரசினரால் ஆட்சி செய்யப் பட்டதினால், இவ்வாலத்தில் பல சிற்பங்கள் சீர் குலைந்து போனது. பின் இத்திரு ஆலயத்தை திருமலை நாயக்கர் என்னும் அரசர், பல வேலை பாடுகள் செய்து, மீண்டும் ஒரு நல்ல நிலைமைக்கு உருவாக்கினார்.

(தொடரும்)

9 comments:

cheena (சீனா) சொன்னார்

மதுரை மீனாட்சி அம்மனைப் பற்றி ஏகப்பட்ட பதிவுகள். கோவிலைப் பற்றியும் எக்கச்சக்க பதிவுகள். இருப்பினும் ஒவ்வோரு பதிவினைப் படிக்கும் போதும் ஒரு புதிய பதிவினைப் படிக்கும் உணர்ச்சி வரும். புத்துணர்வு வரும். அழகு மீனாட்சி அம்மன் படம் அருமை. வரலாறு மற்ற அம்மன்களைப் பற்றியும் தொடரப் போகிறதா ?? வாழ்த்துகள் அன்புத் தோழி

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திரு.சீனா. இன்னும் இந்த கோவிலின் மற்ற விசேஷங்களையும் சொல்ல, அடுத்த பதிவு வேண்டும் என்பதால் தான் இரண்டு பதிவாக போட இருக்கிறேன். கட்டாயம் மீதியையும் படிக்கவும்.

cheena (சீனா) சொன்னார்

மீதி படிக்க அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் அன்புத் தோழி

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திரு சீனா

Anonymous சொன்னார்

நல்ல படம் பொறுமையா எழுதி இருக்கீங்க

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திரு அனானி

Unknown சொன்னார்

Dear anbhuthizhi,
Rama here. Just i saw ur madurai meenashi templefirst very nice to read please i am expecting ur second. ur friend Ramakannan

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திருமதி சுஜீதா. இரண்டாம் பாகம் இன்று வெளியிடயிருக்கிறேன்.அதையும் கண்டிப்பாக படிக்கவும்.

vishalakshi சொன்னார்

this is shanmugam from india i like u r poems