Thursday, July 12, 2007

உப்புச்சார்

இது ஒரு அபூர்வமான குழம்பு. இந்த சமையலை திருநெல்வேலி பக்கம் அதிகம் பார்க்கலாம். இதைப் பற்றி யாராவது கேள்விபட்டாலோ அல்லது சமைத்திருந்தாலோ எனக்கு பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

தயிர் -- 1 முதல் 1 1/2 டம்ளர்
உப்பு -- 1 1/2 டீஸ்பூன் (தேவைக்கேற்றார் போல் மாற்றிக் கொள்ளவும்)
சிகப்பு மிளகாய் -- 4 முதல் 5 வரை போடலாம்
உளுத்தம் பருப்பு -- 1 கைப்பிடி அல்லது 1 முதல் 1 1/2 டீஸ்ப்பூன்
தேங்காய் -- 1 மூடி
சீரகம் -- சிறிது
அப்பக்கொடி, அதளக்கய் வற்றல் ( தாளிக்க)
(இது இரண்டும் ஒரு வகையான மூலிகைகள். இவை திருநெல்வேலி பக்கம் காடுகளிலும், தோட்டகங்களிலும் விளைகிறது. இது இருதயத்திற்கும், நரம்பு சம்பந்தமான வியாதிகளுக்கும் நல்லது.)

தேங்காயை நன்றாக துருவிக்கொள்ளவும். பின்பு மிளகாய் வற்றலையும், உளுத்தம் பருப்பையும் சிறு எண்ணை சேர்த்து, சிகப்பாக நன்கு வறுத்துக் கொள்ளவும். அதன் பின், வறுத்து எடுத்ததை துருவிய தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். நன்கு அரைந்து முடந்த பின்னர், சீரகம் சிறிது அத்துடன் சேர்த்து, ஒரு ஓட்டு ஓட்டி விட்டு, அந்த விழுதை, நன்கு கரைத்த மோருடன் உப்பு சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து 3 அல்லது 4 நிமிடம் வரை பதைக்க வைக்க வேண்டும் அதாவது கொதி நிலைக்கு வரும் முன் இறக்கிவிடவும். பின் அப்பக்கொடி அல்லது அதளக்காய் வற்றலை நன்கு கருக்க எண்ணை விட்டு வருத்து எடுத்து, அதை செய்து வைத்த உப்புச்சாரில் விடவும்.

4 comments:

ஜெயஸ்ரீ சொன்னார்

அன்புத்தோழி, இதை எப்படி பாக்காம விட்டேன்ன்னு தெரியலையே.

நான் செஞ்சிருக்கேன். அப்பக்கொடி தெரியும் ஆனா அதளக்காய் வற்றல் கேள்விப்பட்டதில்லையே ? கொடியிலயே மணத்தகாளி அளவுக்கு இருக்குமே அதைச் சொல்றீங்களா ? அப்பக்கொடி தீர்ந்து போயிட்டா மணத்தக்காளி வற்றல் போடலாம்.

நீங்க சொன்ன மாதிரியேதான் . ஒரே ஒரு வித்தியாசம் மிளகாய், உளுத்தம் பருப்போட கொஞ்சம் வெந்தயமும் வறுத்து அரைக்கலாம்.

ஜெயஸ்ரீ சொன்னார்

இதையும் பாருங்க ...

http://mykitchenpitch.wordpress.com/2007/07/26/mor-saaththamuthu/

அன்புத்தோழி சொன்னார்

வாங்க ஜெயஸ்ரீ, உங்க சமையல் குறிப்பெல்லாம் படிச்சிருக்கேன், மிகவும்ம் அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அதளக்காய் வற்றல் என்பது ஒரு பெரிய பூண்டு பல் அளவுக்கு, பாகற்காய் வடிவத்தில் இருக்கும். நாங்கள் வெந்தயத்தை வேறு ஒரு இதேவிதமான குழம்பில் சேர்ப்போம். அதை அடுத்த பதிவில் போடுகிறேன்.

Unknown சொன்னார்

hello,
Ramakannan here. see this uppuchar we r calling thengai aritha vita kulambu. The same ingridiance only we put that one so i ask vidya and she told me this name we call our place uppuchar. by ur friend Ramakannan