Wednesday, August 1, 2007

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு இந்த ஆகஸ்ட் மாதம் 2007, 3 ஆம் தேதியன்று வருகிறது. ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18 ஆம் தேதியன்று வரும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். இந்த தேதியில் தான் மழை நீர் சேகரித்து வைத்து, மேட்டூர் அணை திறந்து விட பட்டு காவிரியில் கலக்கிறது. அப்படி கலந்து விட்டப்பின் நம் காவிரி நதி கூடுதலாக பெருகி,
அதிகரித்து ஓடும். இதனால் தான் பெருக்கு என்ற பெயர் வந்தது. இதனால் உழவர்கள் தங்கள் நெல் விதைக்கும் வேலையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவையை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத இந்த ஜீவ நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.

அதே போல் நம் ஊர்களிலும் பல பெண்கள், நதிக்கு பூஜை செய்து வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், செல்வம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு
சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள். நாம் நகரத்து வாசிகள், எப்படி ஆற்றங்கறையில் வைத்து சாப்பிடுவது, என்று யோசித்தால் ஏதாவது கடற்கறையிலோ அல்லது பூங்காகளிலோ நண்பர்களோடும், உறவினர்களோடும் சேர்ந்து கூடி சென்று கொண்டாடி மகிழ்ந்து உணவு உண்டால் அந்த சுகமே தனி தான். என்ன தட்டம் போட ஆரம்பிச்சிட்டீங்களா? எல்லோருக்கும் என் பதினெட்டாம் பெருக்கு நல்வாழ்த்துக்கள்.



குறிப்பு; ஏன் ஆடிப்பெருக்கன்று கலப்பு சாதம் செய்கிறார்கள், என்று தெரிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து சொல்லவும்.

4 comments:

தி. ரா. ச.(T.R.C.) சொன்னார்

ஆடிப்பெருக்கன்று எல்லோரும் தங்கள வீட்டில் செய்த சித்ரான்னகளை எடுத்துகொண்டு காவேரி ஆற்றங்கரைக்குப் போய் உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து உண்பர். எடுத்த்ச் செல்வதற்கும்,பூஜை முடிந்து உண்ணும்வரை தாக்கு பிடிக்கும் வண்ணமும் உள்ள கலந்த சாதங்கள் லகுவாக இருப்பதால் அதைக் கொண்டு செல்லுகிறார்கள் என்று நினைக்கிறேன்

அன்புத்தோழி சொன்னார்

நல்ல யோசனையாகத் தான் இருக்கிறது. உண்மையிலேயே இது நான் காரணமாக இருக்கும் என நானும் நினைக்கிறேன்.உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதிற்கு என் நன்றிகள் திரு சந்திரசேகர்.

Anonymous சொன்னார்

hello this is rama from mysore y we r selebrating adi perukku u know because all the rivers means river kaveri,thamirabarani etc., {goddes } pregnency day this message my mom told thats y we r selebrating the adiperukku by RAMAKANNAN FROM MYSORE

அன்புத்தோழி சொன்னார்

வாங்க திருமதி ரமா கண்ணன். நலமா? நாம் எல்லா நதிகளையும் நமது கடவுளாக பாவித்து, அதற்காக கொண்டாடும் தினமாக ஆடிப்பெருக்கை வழிபடுகிறோம் என்று அழகாக கூறியதற்கு என் நன்றிகள்.