Monday, September 10, 2007

காளிகாம்பாள் திருக்கோவில்

இத்திருக்கோவில் சென்னையில் பாரீஸ் தம்பு செட்டிதெருவில் அமைந்துள்ளது. அம்பாளின் பெயர் காளிகாம்பாள், சிவனின் பெயர் கமடேஸ்வரர். முதன் முதலில் இத்திருத்தலம் சென்னைக்குப்பம் என்னும் பகுதியில், பண்டைக் கால ஆங்கிலேயர் ஆட்சியில் கிபி 1640 யில் ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் கட்டப்பட்டது. பிறகு ஆங்கிலேயர்களின் கோரிக்கையின் பேரில் தம்பு செட்டி தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.பின்னர் இத்திலுகோவில் விஸ்வகர்மா குலத்தினரால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.

இத்திருத்தலம் காஞ்சிபுரத்திற்கு ஈசான்யமாகவும், திருமயிலைக்கு வடக்கிலும், திருவொற்றியூருக்கு தெர்க்கிலும்,மற்றும் திருவேற்க்காட்டிற்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தினை வியாசர், அகத்தியர், பராசரர், பிருங்கி மகரிஷி போன்ற பல முனிவர்கள் வழிபட்டிருக்கிறார்கள். மற்றும் இந்திரன்,வருணன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் முதலானோரும் இத்திருதலத்தை வழிபட்டுள்ளார்கள். மற்றும் குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம்அதிகரித்தது என்ற செய்திகளும் உண்டு.

இன்னும் சத்ரபதி சிவாஜி அவர்களும் காளிகாம்பாளை வழிபட்ட பிறகே தனக்குமுடிசூட்டிக் கொண்டார் என்ற வரலாறு செய்திகளும் உண்டு.

இவ்வாலயத்தின் ஸ்தல விருக்ஷம் மாமரம். அம்மனின் பிகாரத்தை சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சித்தி புத்தியுடன்வினாயகர், ஸ்ரீ கமடேஸ்வரர், துர்கை, சண்டிகேஸ்வரர், பிரம்மா, வீரபத்ர மாகாளி,ஸ்ரீ நாகேந்திரர், காயத்ரி, விஸ்வகர்மா,நடராகஜர், இன்னும் நிறைய சந்நிதிகள் உள்ளன.

இவ்வாலயத்திலும், ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேரு ஸ்ரீ சக்கரத்தை காணலாம்.இங்கு அருள் பாலிக்கும் காளிகாம்பாள் மற்ற சக்தியை விட பல மடங்கு சக்திவாய்ந்ததாகும். இன்னும் சொல்லப் போனால் காஞ்சி காமாட்சியே, காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும். அம்பாள் அமர்ந்திருக்கும் காட்சியானது கைகளில் அங்குசம், பாசமும்,நீலோத்ப மலரை தாங்கிய வண்ணமுமாகவும், பின் இடக்கையில் வரத முத்திரை தரித்தநிலையிலும், தன் ஒரு காலை மடித்தும்வலது காலை தாமரையின் மேல் வைத்துபத்மாசன நிலையில் காட்சி தருகிறாள்.இத்திருக்காட்சியைப் பார்க்க கண் கோடிவேண்டும். ஆக நீங்களும் வந்து அம்மனை தரிசித்து அருள் பெருங்களேன்

4 comments:

VSK சொன்னார்

பல ஆண்டுகளுக்குப் பின் சென்ற ஆண்டு இக்கோயிலுக்குச் சென்றேன்.

அதே பரவசம்!

மிக அர்ருமையான கோயிலைப் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி, அன்புத்தோழி!

அன்புத்தோழி சொன்னார்

எத்தனை தடவை சென்றாலும் அலுக்காத கோவிலில் இதுவும் ஒன்று திரு வி எஸ் கே அவர்களே.நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னார்

அன்புத் தோழீ
ரஜினியின் பாபா படத்தில், இக்கோவிலை மையமாக வைத்துத் தானே, இறுதிக் காட்சிகளைப் படமாக்கினார்கள்?

காளிகாம்பாள் கோவில், கந்தகோட்டத்துக்கு மிக அருகில் உள்ள ஆலயம்! கிண்கிணித் தேர் ரொம்ப ஃபேமஸ்!

சிவாஜி பற்றிய குறிப்புகள் எனக்குப் புதிதுங்க! அழகான அம்மன் படத்துடன், பதிவுக்கு நன்றி

அன்புத்தோழி சொன்னார்

நான் பாபா படம் பார்த்ததில்லை, அதனால் தங்கள் கேள்விக்கு தெரியாது என்பது விடை.

//காளிகாம்பாள் கோவில், கந்தகோட்டத்துக்கு மிக அருகில் உள்ள ஆலயம்! கிண்கிணித் தேர் ரொம்ப ஃபேமஸ்//

தகவலுக்கு நன்றி. இந்த விஷயம் எனக்கு புதிது.