Monday, September 24, 2007

குழந்தைக்கு பொடி இதோ

நம்ப நாட்டில் உள்ள பல இயற்கையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் நமக்கு இடைத்தது ஒரு வரப்பிரசாதம். இதை நிறைய பேர் கவனிக்காமல் சீரீயல்ஸ்ல (artificial cereals) தான் சக்தி இருக்குனு நினைத்து, நிறைய வாங்கி கொடுக்கறாங்க. அதே போல ஜீஸ், நம்ம கையால ஆப்பில், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை மிக்ஸியில் போட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுக்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் பல பேர் கடையில் கிடைக்கும் ஜீஸ் பாட்டிலை வாங்கி அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் உடம்பில் சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் தான் சேர்கிறது. நாமும் இயற்கையோடு ஒன்றி, இயற்கை உணவுகளை கொடுத்தால், குழந்தைகளுக்கு நல்ல சத்துக்கள் உடம்பில் சேரும்.

இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன், மாகி நூடுல்ஸ் (magie noodles) இதிலுள்ள ரசாயன கலப்பு உடம்பிற்கு மிகவும் கெட்டது. ஆனால் முக்கால்வாசி வீட்டில் இது தான் குழந்தைகளுக்கு மாலை உணவு. இது பிற்காலத்தில் அவர்கள் உடம்பை மிகவும் பாதிக்கும். அதற்காக அவர்களுக்கு வெளி உணவே கொடுக்காதீர்கள், என நான் சொல்லவில்லை. அதையும் கொடுங்கள், இயற்கை உணவுகளை அதிகம் கொடுங்கள் என்று தான் சொல்கிறேன்.

இந்த இயற்கையான சத்துமாவு கஞ்சியை குழந்தைகளுக்கு வீட்டில் செய்து தினமும் கொடுத்தால், அது அவர்கள் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கஞ்சிப்பொடி செய்யும் முறை;

சம்பா கோதுமை -- 200 கிராம்
ஜவ்வரிசி -- 100 கிராம்
கம்பு -- 100 கிராம்
கேழ்வரகு -- 100 கிராம்
பார்லி -- 100 கிராம்
பாசிப்பருப்பு -- 100 கிராம்
பாதாம், முந்திரி -- 100 கிராம் (இரண்டும் சேர்த்து)
புழுங்கலரிசி -- 200 கிராம்
பொட்டுக்கடலை --100 கிராம்
ஏலக்காய் -- 4 எண்ணிக்கை.

புழுங்கலரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு இவற்றை சுமார் ஒரு மணிநேரம் ஊறவைத்து, பின் வடிகட்டி துணியில் உலர்த்தி, அதை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். ஆனால் முந்திரி, பாதாம் இவற்றை லேசாக வறுத்தால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள சாமான்களில் பார்லியையும், பொட்டுக்கடலையையும் வறுக்க வேண்டாம். இவை அத்தனையையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மாவாக திரித்து வைத்துக்கொள்ளவும். இவை அனைத்துமே எல்லா இடத்திலும் கிடைக்கும். ஒரு வேளை கம்பு, கேழ்வரகு இவை கிடைக்கவில்லை என்றால் அது இல்லாமலும் செய்யலாம். அதே போல் இந்த கஞ்சியை பாலோடு சேர்த்து வேக வைத்து கொடுத்தால், உடம்பில் பால் சத்தும் இதனுடன் சேரும்.

இவ்வளவே தாங்க, நீங்களும் உங்க குழந்தைக்கு பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?

குறிப்பு; இதில் நான் ஏதாவது சொல்ல மறந்திருநால் தயவு செய்து குறிப்பிடவும்.

11 comments:

Anonymous சொன்னார்

uluntha paruppu, thuvaram paruppu, samba kothumai,solam ellam varuthu serkalam

காரூரன் சொன்னார்

நல்ல ஆரோக்கியமான பதிவு.
இந்திய மண்ணில் 7 வருடம் வாழ்ந்த போது இலை குழை சாப்பிட்டதில்லை. கிட்டத்தட்ட 10 டாலர் கொடுத்து இப்போது இலை, குழை எல்லாம் சாப்பிடுகின்றேன். 300 மில்லியன் மக்கள் மட்டுமே கொண்ட அமெரிக்கர்கள், உலகத்திலுள்ளோர் உட்கொள்ளும் கலோரியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை உட்கொள்கின்றார்களாம்.

Jazeela சொன்னார்

நல்ல குறிப்பு நன்றி. அதென்ன ஜீஸ்? Cheese- பாற்கட்டி. cereal- தானியம்.

அன்புத்தோழி சொன்னார்

மற்ற சிலதையும் எடுத்து கூறியதிற்கு நன்றி திரு நக்கீரன். ஆனால் சோளம் எல்லா குழந்தைகளுக்கும் ஒத்துக்குமா என்று எனக்கு தெரியவில்லை.

அன்புத்தோழி சொன்னார்

எப்பொழுதுமே நிழலின் அருமை வெய்யிலில் இருக்கும் போது தான் தெரியும் என்பார்கள். அது சரியாக உள்ளது. நன்றி திரு காரூரன்.

அன்புத்தோழி சொன்னார்

தமிழில் பொருள் விளக்கியதிற்கு நன்றி திரு ஜெஸிலா

kuppusamy சொன்னார்

நன்றாக உள்ளது. இத்துடன் குழந்தைகளுக்குப் பொருந்தக் கூடிய மூலிகைப்பொடி (தூதுவேளை,துளசி, ஓமவல்லி போன்று...)சேர்த்துக்
கொள்ளலாம். நன்றி.

அன்புத்தோழி சொன்னார்

கூடுதல் தகவல்களுக்கு நன்றி திரு குப்புசுவாமி.

நிலா சொன்னார்

அம்மாகிட்ட செஞ்சு தர சொல்லி சாப்பிட்டு பாத்துட்டு உங்ககிட்ட சொல்றேன் ஆண்ட்டி.

அன்புத்தோழி சொன்னார்

சமத்து குட்டி நீ.

Unknown சொன்னார்

vanakam anbhuthozhi,
Mysore ramakannan here. I saw ur baby food malt preparations is good. What my mother will do know ragi, redsoya{rajma}, greengramdall these items first she ill dip in the water before the day and next day clean and she ill tye in the cloth sepatately and another next day if we open that pulses it ill grow so for that pulses one by one if u fry and another items u given know after she ill fry and we can grind it ill too much fiber for the babies. for these things quantities ragi is 1/2 kg and another items 100 grams only wheat is one kg. this is my mother's ratio. thankyou ur friend RAMAKANNAN