Tuesday, March 6, 2007

கார்ட்டூன் சானல்

நான் இன்று உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போவது அமரிக்காவில் வரும் " கார்ட்டூன் சானல்" பற்றி தான். ஆம், இங்கு குழந்தைகளுக்காக வரும் சானலில் "ஸ்பானிஷ்" மொழி சொல்லிக் கொடுக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் எநதெந்த பொருள் எதற்கு உபயோகப்படும் என்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்களுடைய சங்கீதத்தையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். பிறகு, மற்ற விலங்குகளைக் காப்பாற்றுவது பற்றியும், எப்படி அன்பாக பழக வேண்டும் என்பது பற்றியும் சொல்லித்தருகிறார்கள். அத்தோடு நாம் அருந்தும் பழங்களின் சத்துக்கள் பற்றியும், அதனால் விளையும் பயன்கள் பற்றியும் கூறுகிறார்கள். பிறகு எப்படி மற்றவர்களிடம் அன்பாக உரையாடுவது என்பது பற்றியும், பின் எப்படி சேர்ந்து வேலை செய்தால் சுலபமாக செய்ய முடியும் என்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆகவே சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் செய்கிறார்கள்.

ஆனால் குறைகள் என்று சொன்னால் இந்த வயதிலேயே "ராக்" இசையை அறிமுகம் செய்கிறார்கள், அது போலவே காதலர் தினம் பற்றியும், எப்படி அன்று பழக வேண்டும் என்றும், என்னன்ன பரிசு கொடுத்தால், அதற்கு என்னன்ன கிடைக்கும் என்பது பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார்கள். பிறகு முன்பு ஒளிபரப்பிய நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள், இதனால் குழந்தைகளுக்கு சலிப்பு உண்டாகும்.

இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

குறிப்பு: ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் சேர்த்து எழுதியுள்ளேன், அதற்க்காக மன்னிக்கவும்.

2 comments:

சேதுக்கரசி சொன்னார்

குறிப்பா எந்த சேனலை சொல்றீங்க? கார்ட்டூன் நெட்வொர்க்கா?

சின்னக் குழந்தைகளுக்கு 7, 8 வயது வரைக்கும், PBS தான் சிறந்தது. அடுத்ததாக, Playhouse Disney, Nick Jr, Noggin, etc.

//அது போலவே காதலர் தினம் பற்றியும், எப்படி அன்று பழக வேண்டும் என்றும், என்னன்ன பரிசு கொடுத்தால், அதற்கு என்னன்ன கிடைக்கும் என்பது பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.//

preschool-இல் கூட அன்பர்கள் தினம் கொண்டாடி வாழ்த்தட்டைகள் கொடுத்துக்கொள்கிறார்கள். அது காதலர் தினம் என்பதை விட அன்பர்கள் தினம் என்பதே சரி. அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறில்லை என்பது என் கருத்து.

//முன்பு ஒளிபரப்பிய நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள், இதனால் குழந்தைகளுக்கு சலிப்பு உண்டாகும்.//

மிகவும் சின்னக் குழந்தைகளுக்கு (4, 5 வயது வரைக்கும்) இது பொருந்தாது. அவர்களுக்கு சலிப்பு வராது, மாறாக, அதை விரும்புவார்கள். Babies & toddlers love repetition.

Arun's Thoughts சொன்னார்

வணக்கம் சேதுக்கரசி,

நான் நிக் ஜுனியர் பற்றியும், டிஸ்னி சானல் பற்றியும் சேர்த்து குறிப்பிட்டுள்ளேன். அதிலே காதலர் தினத்தன்று அவர்கள் இதயம் பொருத்தப்பட்ட கார்டு கொடுப்பதும், பின்பு முத்தம் கொடுப்பது பற்றியும் வந்தது, அதெல்லாம் பிஞ்சு மனசை தப்பாக பாவிக்கக் கூடாது என்பதால் தான் அப்படி கூறியிருந்தேன். மத்தப்படி அன்பர்கள் தினமாக கொண்டாடினால் கண்டிப்பாக தவறில்லை. அதுபோல குழந்தைகளுக்கு மறு ஒளிபரப்பு பிடிக்கும் என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.