Sunday, March 25, 2007

வித்தியாசமான (weird) குணங்கள்

வணக்கம்,

என்னுடைய வித்தியாசமான ஐந்து குணங்களை திருமதி முத்துலெட்சுமி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். நானே இப்பொழுது தான் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். என்னைப் பற்றி சிந்திக்க வைத்ததிற்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

1. என் மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்து கொண்டே இருப்பேன். குறிப்பாக நான் எனக்குள்ளே ஒரு தனி வாழ்க்கை வாழ்வேன். இதனால் சில சமயத்தில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே கவனிக்காமல் இருப்பேன். பிறகு மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்றே எனக்கு தெரியாமல் போய்விடுகிறது. குறிப்பாக பயணம் செய்யும் நேரங்களில் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பது எனக்கு வழக்கமாக போயிற்று. இதனால் நான் வெளியில் வேடிக்கை பார்த்தும் என் மனதில் எதுவும் பதியாமல் போய்விடுகிறது.

2. குழந்தை மாதிரி சண்டைப் போடுவது. சில நேரத்தில் நான் குழந்தைப் போல சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் தவறாக நினைத்துக் கொண்டு சண்டைப் போடுவேன். பிறகு தான் தெரியும் அவர்கள் வேறு அர்த்தத்தில் சொல்கிறார்கள், நாம் தான் தவறாக நினைத்துக் கொண்டு விட்டோம் என்று. அதற்காக நாள் முழுவதும் வருத்தப் படுவேன். எதற்கு இந்த சின்ன பிள்ளைத்தனமோ எனக்கு தெரியவில்லை.

3. எதையும் பார்த்தால் முதலில் எந்த விஷயம் அதில் இல்லை என்று தான் பார்ப்பேன். இதனால் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும் என்றே தோன்றாது. குறிப்பாக ஏதாவது ஒரு புது இடத்திற்கு சென்றால் எல்லோரும் அங்கிருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி பாராட்டுவார்கள். ஆனால் நான் மட்டும் எது இந்த இடத்தில் இல்லை என்று பார்ப்பேன்.

4. நானாக யாரிடமும் உதவி கேட்க மாட்டேன். ஆனால் அவர்களே வந்து உதவி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பேன். இதனால் சிலபேர் வேலை விஷயத்தில் கண்டு கொள்ளவே மாட்டார்கள். கடைசியில் நானே எல்லா வேலைகளையும் செய்யும் படி ஆகிவிடும். இதனால் யாருக்கு லாபம் என்று சொல்லுங்கள்?

5. முன்பெல்லாம் தனக்கு தெரியாத இல்லை சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடவே மாட்டேன். இதனால் வீட்டில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியாது. நான் உண்டு, என் வேலை உண்டு என்றிருப்பேன். ஆனால் இதனால் நிறைய விஷயங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் போயிற்று. உதாரணமாக அம்மா, அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தேன். பிறகு தான் இது தவறான விஷயம் என்று தெரிந்துக் கொண்டு திருத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

இவர்களை நான் அழைக்கிறேன்

மு.கார்த்திகேயன்
எஸ் கே அய்யா
சிறில் அலெக்ஸ்
எஸ்பி விஆர் சுப்பையா
வடுவூர் குமார்

5 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னார்

நன்றி அன்புத்தோழி...விளையாட்டை தொடர்ந்தற்கு.
இரண்டும் நாலும் எனக்கும் கொஞ்சமிருப்பதாகத் தோன்றுகிறது.
:))

சிறில் அலெக்ஸ் சொன்னார்

அன்புத்தோழி,
நல்லாயிருக்குது உங்க வியர்ட் லிஸ்ட்.
:))

என்னுடைய வியர்டு லிஸ்ட் ஏற்கனவே போட்டுட்டேன். கவிதாவின் அழைப்பின்பேரில்.

என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. 'சற்றுமுன்' என் தனிப்பட்ட வலைத் தளமல்ல. அது ஓரு குழுத் தளம். 'தேன்'தான் எனது வலைப்பதிவு. நீங்கள் சற்றுமுன்னில் பின்னூட்டமிட்டதால் இதைச் சொல்கிறேன்.

அன்புடன்
சிறில் அலெக்ஸ்

Subbiah Veerappan சொன்னார்

////// அன்புத்தோழி said...
வணக்கம் திரு எஸ்பி விஆர் சுப்பையா,

உங்களுக்கு weird கேள்வி சுற்றை அனுப்பியிருக்கிறேன்.
பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் /////

முன்பே வேறு ஒரு பதிவுலக நண்பர் முந்திக்
கொண்டு விட்டார் சகோதரி!.
கோவியார் கேட்டு நான் பதிவுட்டுள்ளேன்
சுட்டி இங்கே உள்ளது
தலைப்பு: என்ன குணம் உந்தன் குணம்? 23.3.2007
http://devakottai.blogspot.com/2007/03/blog-post_23.html

நானானி சொன்னார்

//எனக்குள்ளே ஒரு தனி வாழ்கை//
//பயணத்தில் சிந்தனை//
இரண்டும் என்னோட வியர்டும் கூட!
பதிய மறந்தது.
நன்றாக இருந்தது உங்கள் வியர்டு!

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திரு நானானி